மட்டக்களப்பு வாவியில் தோணி கவிழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு சீலாமுனை பகுதியில் இருந்து நாவலடி பிரதேசத்திற்கு மட்டு.வாவி ஊடாக 6 பேர் பயணித்த தோணி வாவியில் கவிழ்ந்ததில் நீரிழ் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நிலையில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் நான்கு பேர் நீந்தி உயிர் தப்பியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டு.சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதுடைய தவசீலன் கிருசாந்தன், மாமாங்கத்தைச் சேர்ந்த 18 வயதுடைய பிரபாகரன் பிருந்தயன் ஆகிய இருவருமே இதன்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மட்டு.தலைமையக பொலிஸ் பிரிவு சீலாமுனை மாமாங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் டிக்ரொக் வீடியோ தரவேற்றம் செய்வதற்காக சம்பவதினமான இன்று காலை 11 மணியளவில் சீலாமுனையில் இருந்து தோணியில் வாவியில் பிரயாணித்து நாவலடிக்கு சென்றுள்ளனர்.

அங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துவிட்டு மீண்டும் சீலாமுனைக்கு தோணியில் பிரயாணித்தபோது தோணியின் கட்டப்பட குள்ளாதடி இரண்டாக உடைந்து தோணி வாவியில் கவிந்ததையடுத்து அனைவரும் நீரில் முழ்கியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணை
இதனையடுத்து 4 பேர் நீந்திகரையடைந்ததுடன் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து கடற்றொழிலாளர்களின் உதவியுடன் அவர்களை தேடியுள்ளனர்.

இதன்போது நாவலடி பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு மட்டு.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   யாழில் இருந்து கனடா தப்பி செல்ல முற்பட்ட பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கைது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *