புத்தளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: பெண் ஒரு.வர் ப.லி

புத்தளம் மனத்தீவு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் பெண்ணொருவர் உயி.ரிழந்துள்.ளார் இந்த விபத்து நேற்று(07.10.2023) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து 6ம் கட்டை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி மாடு ஒன்று குறுக்கால் பாய்ந்தமையினால் கட்டுப்படுத்த முடியாமல் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திலேயே ப.லி
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் இரண்டு சிறுவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

விபத்தில் உயி.ரிழந்தப் பெண் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Shares