மன்னாரில் கடற்றொழிலாளர் வலையில் சிக்கிய அபூ.ர்வ பாம்பு மீன் (Photos)

மன்னார் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் மிகவும் அபூர்வமும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இன்றைய தினம் (07.10.2023) சனிக்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த கடற்றொழிலாளரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது.

பாம்பின் தோற்றம் கொண்ட குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது.

10 அடி நீளம்
பெரும்பாலும் இவ்வகை மீன்கள் கடற்றொழிலாளர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது.

அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும்.

ஆனாலும் இன்றைய தினம் பிடிபட்டுள்ள குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டதாக காணப்படுகின்றது.

இவ் வகை மீன்கள் இடுப்பு பிடிப்பு, உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்தாக அமைவதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மறக்காமல் இதையும் படியுங்க   இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares