இலங்கையில் மார்பக புற்.றுநோ.யால் உயிரிழக்கும் பெருமளவானோர்

இலங்கையில் மார்பக புற்று.நோயால் வருடாந்தம் 700-800 பேர் வரை உயிரிழப்பதாக மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக மருத்துவர் சுராஜ் பெரேரா தெரிவித்தார்.

புற்றுநோய் பரிசோதனை அவசியம்
இதன்படி ஒரு நாளைக்கு 14 இறப்புகள் பதிவாகின்றன என்று அவர் கூறினார்.

எனினும் ஆரம்பகால நோயறிதல் நோயைக் குணப்படுத்த வழிவகுக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தநிலையில் 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

Shares