வேகமாக பைக் ஓட்டி அதை youtube சேனலில் பதிவிட்டு பாப்புலர் ஆனவர் டிடிஎப் வாசன். அவர் மஞ்சள் வீரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் சாலையில் வீலிங் செய்தபோது கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். அவர் 20 லட்சம் ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததனால் உயிர் தப்பினார் என கூறப்படுகிறது.
ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்டி ஓட்டியதாக டிடிஎப் வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமீன் கிடையாது
இதுவரை இரண்டு முறை ஜாமீன் கேட்டு டிடிஎப் வாசன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதி மன்றத்தில் டிடிஎப் வாசன் ஜாமீன் கோரி இருந்தார்.
இதன் விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் நீதிபதி டிடிஎப் வாசன் பற்றி கோபமாக கூறி இருக்கும் கருத்து வைரலாகி இருக்கிறது.
டிடிஎப் வாசனின் பைக்கை எரித்துவிட வேண்டும், அவரது youtube சேனலை மூடிவிட வேண்டும் என நீதிபதி காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.
மேலும் உடல்நிலை சரியில்லை என சொல்லை ஜாமீன் கேட்ட வாசனுக்கு சிறையிலேயே டிரீட்மென்ட் அளிக்க நீதிபதி உத்தரவிட்டு இருக்கிறார்.