அசோக் செல்வனை திருமணம் செய்த நடிகை கீர்த்தி பாண்டியனின் மாடர்ன் உடை புகைப்படங்கள்

சூது கவ்வும் படம் மூலம் நடிகரானவர் அசோக் செல்வன். தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வரும் அவருக்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்திக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இன்று அவர்களின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.

கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் இருக்கும் இட்டேரியில் இன்று காலை திருமணம் நடந்தது. அதில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இரு வீட்டாரும் மணமக்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் என்றும் சந்தோஷமாக வாழ வேண்டும் என ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மணமக்கள் எளிமையான உடையில் மகிழ்ச்சியாக காணப்படுகிறார்கள்.

கீர்த்தி பாண்டியன், அசோக் செல்வன் திருமணத்தில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டார். சகோதரிக்கு திருமணமாகிவிட்டது. உங்களுக்கு எப்பொழுது திருமணம் என ரம்யா பாண்டியனிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருமணத்தை அடுத்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Shares