jaffna7news

no 1 tamil news site

News

உடை மாத்த சென்ற மணப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்… அதிர்ச்சி சம்பவம்!!

உத்தர பிரதேசம் என்றாலே பாலியல் பலாத்காரம், கொடூர கொலை, துப்பாக்கி சூடு, தலித் வன்கொடுமை என்ற கோணத்தில்தான் செய்திகள்தான் தினம் தினம் வருகின்றன. அது கசப்பான உண்மையும்கூட. குற்றங்களிலேயே கொடூரமாகத்தான் அங்கு நடக்கும். மனசாட்சிக்கு இடமே இல்லை.

அந்தவகையில் உபியில் ஆசை ஆசையாய் மணமேடையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருந்த பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன்பே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம் முபாரிக்புர் பகுதியை சேர்ந்த இளம்பெண் காஜல். இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், காஜலுக்கு அவரது பெற்றோர் நொய்டாவைச் சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் செய்துவிட்டனர். இந்த விஷயம் அந்த இளைஞருக்கு தெரிந்து கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நாம் காதலித்த பெண் நாளைக்கு இன்னொருத்தரின் மனைவியாக போகிறாள் என்ற ஆதங்கம் அந்த இளைஞரை நாளுக்கு நாள் வாட்டி எடுத்து வந்துள்ளது.

இந்த சூழலில் காஜலுக்கு முகூர்த்த தேதியியும் குறித்துவிட்டனர். அதையொட்டி கடந்த வியாழன் அன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்து வந்தது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் வேறொரு நிகழ்ச்சிக்காக மாற்று உடையை அணிய வேண்டும். அதற்காக காஜல் தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார்.

அப்போது காஜலின் அறையில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. உடனே காஜலின் உறவினர்கள் ஓடி வந்து பார்த்தபோது காஜல் தலையில் குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை கண்டு அதிர்ந்த போயுள்ளனர்.

போலீசார் விசாரணையில், சம்பவம் நடந்த அன்று காஜலின் முன்னாள் காதலன் நிகழ்ச்சிக்கு வந்ததும், பின்னர் காஜல் துணி மாற்ற சென்றபோது பின்னாடியே சென்று நாட்டு வகை துப்பாக்கியால் காஜலின் இடது கண்ணோரத்தில் சுட்டு கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares