ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் சிலவற்றையும் பார்க்கலாம்

மனிதனுடைய ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக விளங்குவது மூளை இதன் வேகம் மற்றும் வினைத்திறனை இதுவரை கணிக்க முடியவில்லை.

இது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. இதே போல தான் ஞாபக சக்தியும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது.

மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டாலே போதும் ஞாபக சக்தியை எளிதாக அதிகரித்து கொள்ளலாம்.

ஞாபக சக்தி குறைவதற்கு சரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளாததும் ஒரு காரணம் ஆகும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பங்கு தண்ணீர் உள்ளது. இதனால் தண்ணீர் குடிக்கும் அளவு குறைந்தால் மூளையில் வறட்சி ஏற்பட்டு ஞாபக சக்தியும் குறையும். எனவே தினமும் போதியளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

மீன்கள்
மூளைக்கு omega-3 சத்து மிக அவசியம். omega-3 மூளையில் புதிய நரம்புகள் உருவாவதற்கும் மூளை சரியாக செயல்படுவதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் மிக உதவியாக இருக்கின்றது.

முட்டை
முட்டையில் மூளையின் வளர்சிக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் பல இதர ஊட்ட சத்துக்கள் முட்டையில் நிறைந்துள்ளன.

மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்கும் தவறாமல் தினமும் உணவில் முட்டை சேர்த்து சாப்பிட்டு வாருங்கள்.

பூசணி விதைகள்
பூசணி விதைகள் சக்தி வாய்ந்த ஆன்டி ஒக்ஸிட் இது நம் உடம்பில் உருவாக கூடிய நச்சுக் கழிவுகளை வெளியேற்றும்.

இந்த பூசணி விதைகள் சிந்திக்கும் திறனையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும் தன்மை கொண்டவை.

பால்
சிறந்த ஊட்டச்சத்து மிக்க உணவுகளில் பிரதானமானது பால். பாலில் புரதம் மற்றும் விட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.

மூளை ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் செயல்பட வேண்டுமெனில் தினமும் ஒரு கோப்பை பால் குடித்து வருவது மிகவும் நல்லது.

வல்லாரை கீரை
தினமும் உணவில் வல்லாரை சேர்ப்பது சிறந்தது வல்லாரை மூளைக்கு ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் கொடுக்க கூடியது.

பொதுவாக கீரை மற்றும் மரக்கறி வகைளில் உள்ள ஊட்ட சத்துக்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

பாதம்
இரவில் பாதாமை நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் மூளையின் நரம்புகள் வலுப்பெறுவதுடன் நினைவாற்றலும் அதிகரிக்கும்.

தேன்
தேனில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி தேன் சாப்பிட்டு வந்தால் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

மஞ்சள்
மஞ்சள் வெறும் கிருமிநாசினி மட்டுமல்ல மூளைக்கும் மிகவும் அவசியமான பொருள். உணவுகளில் மஞ்சளினை சேர்க்க மறந்து விடாதீர்கள் இது உடலுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கும் ஆரோக்கியமானது.

மறக்காமல் இதையும் படியுங்க   ஒரே மாதத்தில் கொழுப்பை கரைக்கனுமா? இந்த பானத்தை தினமும் வெறும் வயிற்றில் குடிங்க

ஒலிவ் ஆயில்
இருதய ஆரோக்கியம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு ஒலிவ் ஆயில் சிறந்த உணவாகும். உணவுகளில் ஒலிவ் ஆயில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதயம் மற்றும் மூளைக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *