10 வயது வளர்ப்பு மகளிடம் அத்துமீறிய விமானப்படை அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!!

கோவை மாவட்டம் சூலூர் கலைமகள் நகரைச் சேர்ந்தவர் விமானப்படையில் உத்தம்பூர் பகுதியில் ஏர்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவரது மனைவி அரசு பள்ளி தலைமையாசிரியராக உள்ளார்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வசூல்செய்து வருகிறார்.இந்நிலையில் மாஜி விமானப்படை அதிகாரி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது 10 வயதான அந்த குழந்தை தனக்கு தனது தந்தை பாலியல்சீண்டல் செய்வதாக பள்ளி ஆசிரியரிடம் புகார் கூறியுள்ளார். அவர்கள் கோவை சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளனர். அதன்பேரில் சைல்டு லைன் அமைப்பினர் நேற்று அந்த பெண் குழந்தையிடம் விசாரணை நடத்தினர்.

இதில் குழந்தை கூறிய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததைத் தொடர்ந்து மாஜி விமானப்படை அதிகாரியை பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்னர்.மேலும் இந்த பெண் குழந்தைக்கு தாய் தந்தை யார் என்பதும்,குழந்தையை தத்தெடுத்தாரா என்பதிலும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.குழந்தையை விலைக்கு வாங்கி வந்ததாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

மேலும் குழந்தை விற்பனை செய்தவர் 3 கைமாரி குழந்தையை இவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் குழந்தை விற்ற கும்பல் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.தத்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Shares