பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா வந்திருக்கிறார்.
எனக்கு படிப்பு வரவில்லை, அதனை என் அம்மாவும் புரிந்துகொண்டார். படிப்பு வரவில்லை என்றால் என்ன, வேறு என்ன செய்ய விருப்பம் என கேட்டார், நான் நடிகை ஆக வேண்டும் என கூறினேன் என ஜோவிகா கூறினார்.
பிக் பாஸ் வீட்டில் எப்படி விளையாட வேண்டும் என அம்மா என டிப்ஸ் கொடுத்து அனுப்பினார் என கமல் கேட்க. அவர் எதுவும் டிப்ஸ் தரவில்லை என ஜோவிகா பதில் கூறியது கமலுக்கு ஆச்சர்யம் அளித்தது.
ஷோவுக்கு வந்திருந்த வனிதாவிடமே கமல் அந்த கேள்வியை கமல் கேட்கிறார். “நான் எத்தனை முறை பிக் பாஸ் வந்திருக்கிறேன். அத்தனை முறையும் என்னை வெளியில் அனுப்பிட்டீங்க. நான் டிப்ஸ் சொல்லி அனுப்பினா என மகள் ஜெயிக்க முடியுமா” என வனிதா கமலிடம் கூறி இருக்கிறார்.