நரம்பு முடிச்சு நோய், வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படும் “நரம்பு சுருட்டல் குணமாக” என்ன செய்ய என்று விரிவாக இந்த பதிவில் காண்போம்.
உடம்பில் நரம்பு சுருண்டு இருப்பதை தான் “நரம்பு சுருட்டல்” நோய் என்று அழைக்கிறார்கள். இந்த நரம்பு சுருட்டல் நோய் அதிக வலியை கொடுக்க கூடியது.
இன்றைய காலங்களில் நரம்பு சுருட்டல் நோய்க்கு அறுவை சிகிச்சை தான் தீர்வு என்று கூறப்படும் நிலையில் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்துவது மிக மிக சாத்தியமானது.
அறுவை சிகிச்சை செய்தாலும் நரம்பு சுருட்டல் நோய் சிலருக்கு மீண்டும் மீண்டும் ஏற்படுவது கவனிக்க வேண்டியது.
இது பரம்பரையாக ஏற்படக்கூடிய நோயாக இருந்தாலும் பரம்பரையில் யாருக்கும் இல்லாவிட்டாலும் வருகிறது.
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள்
அறிகுறி 1: இரத்த குழாய்கள் கால்களில் இலேசான பச்சைநிறமான கோடுகள் போன்று தோற்றம் அளிக்கும்.
அதிகம் நின்று வேலை செய்த பிறகு அல்லது நீண்ட தூரம் பிரயாணம் செய்த பிறகு நரம்புகளில் அதிகமான வலி வேதனையை உணர முடியும்.
அறிகுறி 2: அடுத்தகட்டமாக இதில் பச்சை நிறமான இரத்த குழாய்கள் கரும் பச்சையாக அல்லது பழுப்பு நிறமாக மாறுவதை காண முடியும்.
அறிகுறி 3: உடலில் இரத்த குழாய்கள் வீங்கி வெளியில் நன்றாக தென்படும் பெரும்பாலான நேரங்களில் வலி, வேதனை, அரிப்பு மற்றும் கால்களில் நிறம் மாற்றம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும்.
நரம்பு சுருட்டல் நோய் வர காரணம்
பரம்பரை,அதிக உடல் எடை, அதிகம் நின்றுகொண்டு வேலை செய்வது, நீண்ட நேரம் காலை தொங்க போட்டுக் கொண்டு இருப்பது, முதுமை, இரத்த ஓட்டத்தில் இருக்கும் பிரச்சனை, உடல் பயிற்சி இன்மை, அதிகம் நடப்பது
ஆரம்ப கட்டத்திலேயே இதை அடையாளம் கண்டு கொண்டால் சில வீட்டு வைத்திய முறைகள் மூலமும் நம் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலமும் இதை பெரும்பாலும் குணப்படுத்திக் கொள்ள முடியும்.
நரம்பு சுருட்டல் குணமாக
உணவு முறை
ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை தூண்டக்கூடிய உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
உடல் பயிற்சி
உடல் பயிச்சியை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை. அதுவும் தோப்புக்கரணம் போடுவது நரம்பு சுருட்டல் நோய்க்கு சிறந்த உடல் பயிற்சி தினமும் காலை மாலை 25 தோப்புக்கரணம் 90 நாட்கள் போட்டு வந்தால் நரம்பு சுருட்டல் நோயை குணப்படுத்தலாம்.
உட்காரும் போது கால் தரையில் படாமல் காலை தொங்க போட்டுகொண்டு உட்காருவதை தவிருங்கள் இது நரம்பு சுருட்டல் நோய்க்கு வழிவகுக்கும்.
எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் உட்காரும் போது அதிகம் காலினை மடித்து இருக்க முயற்சி செய்யுங்கள் அல்லது காலினை நீட்டி இருக்க முயற்சி செய்யுங்கள்.
கிராமங்களில் வயதான பாட்டிமார் இருக்கும் போது காலை நன்றாக நீட்டி உட்காந்திருப்பார்கள். இவ்வாறு உட்காருவது நரம்பு சுருட்டலுக்கு மட்டுமல்ல பல வியாதிகளை வராமல் தடுக்கும். அத்தோடு ஆயுளையும் அதிகரிக்கும்.
தவிர்க்க வேண்டியவை
இறுக்கமான ஆடைகள் அணிவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
குதிக்கால் உயர்ந்த (கீல்ஸ்) காலணிகள் பயன்படுத்துவதை தவிருங்கள்.
உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு எண்ணெய் உணவுகள், துரித உணவுகள், இனிப்புக்கள் மற்றும் குளிர்பானங்கள் எடுத்துக்கொள்வதை இயன்றளவு குறைத்துக் கொள்ளுங்கள்.
வெரிகோஸ் வெயின் பாட்டி வைத்தியம்
தேவையான பொருட்கள்
கேரட்
ஆப்பிள் வினிகர்
கற்றாளை சதை
கேரட்டினை துண்டு துண்டாக வெட்டி அத்துடன் கற்றாளை சதையினை சேர்த்து தண்ணீர் சேர்க்கமால் நன்றாக அரைத்து இதில் அரைக்கும் போது சிறிதளவு ஆப்பிள் வினிகரும் சேர்த்து அரைத்து.
பிறகு அதனை வடிகட்டி சாற்றினை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனை நரம்பு சுருட்டல் இருக்கும் இடத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் அரை மணிநேரம் நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
இதன் பின்னர் அரை மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் ஊறவைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் களவுங்கள்.
இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நரம்பு சுருட்டலில் இருந்து விடுபடலாம்.