உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் என்று இதில் பார்க்கலாம்.
உடலில் பல நோய்களுக்கு பித்தம், கபம், வாதம் ஆகியவையே பிரதான காரணியாக இருக்கின்றது.
பித்தம் என்றால் என்ன
பித்தம் என்பது உஷ்ணமாகும்.கல்லீரலில் மஞ்சள் நிறத்தில் சுரக்க கூடிய நீர் தான் பித்த நீர். இந்த பித்தநீர் கல்லீரலில் சுரக்கப்பட்டு பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. இது உணவு செரிமானத்திற்கு உதவுகின்றது.
இந்த பித்தம் உடலில் சரியாக இருந்தால் தான் நன்றாக பசி எடுக்கும், உணவு நன்றாக செரிமானம் ஆகும்.
பித்தம் அதிகமானால் அறிகுறிகள்
உதடு, உள்ளங்கை, உள்ளங்காலில் வெடிப்பு ஏற்படும்,உடல் வறட்சியாக இருக்கும்,தோல் கடினமாக மாற்றமடையும்,குமட்டல்,அடிக்கடி தலைச்சுற்று,இளநரை,மலச்சிக்கல்,பசியின்மை
வாயு பிரச்சனை,உடல் மற்றும் கண் எரிச்சல்,நாக்கு வறட்சியாக காணப்படும்,வாய் கசப்பு தன்மையுடையதாக இருக்கும்
போன்ற அறிகுறிகள் காணப்படும்.
பித்தம் அதிகமானால் ஏற்படும் நோய்கள்
அஜீரணம்,மனஅழுத்தம்,அல்சர்,உயர் இரத்த அழுத்தம்,இளநரை,பொடுகுதொல்லை,முடி உதிர்வு,தோல் சுருக்கம்,மஞ்சள்காமாலை
என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும்
அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்ணும் போது உடலில் பித்தம் அதிகமாகும். காரணம் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் அடைய தாமதமாகும் இதனால் உடலில் அதிகளவு பித்தம் சுரக்கப்படும். அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவுகள் உண்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உடலில்நீர் சத்து குறைந்து பித்தம் அதிகமாகும். தினமும் போதியளவு தண்ணீர் எடுத்துக்கொள்வது அவசியம்.
மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கம் அதிகமாக இருந்தால் இது உடல் உஷ்ணத்தை தூண்டி பித்தத்திற்கு வழிவகுக்கும். மது மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தை கைவிடுவது பித்தம் குணமாக மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிக சிறந்தது.
அதிக புளிப்பு தன்மை உள்ள உணவுகள், அதிக நொறுக்கு தீனிகள், காரத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்பதாலும் உடலில் பித்தம் அதிகமாக சுரக்கும். எனவே இந்த உணவுகளை குறைத்துக்கொள்வது சிறந்தது.
மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் பித்தம் அதிகரிக்கும். எனவே உணவில் அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிகமான அளவு தேனீர், காப்பி அருந்துவதும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பித்தத்தை அதிகரிக்கும். அதிகளவு டீ, காப்பி அருந்துவதை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.
சரியான அளவு தூக்கமின்மையும் உடல் உஷ்ணத்தை அதிகரித்து பித்தத்தை அதிகரிக்கும். எனவே தினமும் போதியளவு தூக்கம் மிக அவசியம்.
பித்தம் குறைய பாட்டி வைத்தியம்
தேவையான பொருட்கள்
சுக்கு பவுடர்: 50 கிராம்
சீரக பவுடர்: 50 கிராம்
நெல்லிக்காய் பவுடர்: 50 கிராம்
இவை மூன்றையும் கலந்து ஒரு போத்தலில் அடைத்து வைத்துக்கொள்ளுங்கள். காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் கலந்து உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு சிறிது காலம் செய்து வந்தால் பித்தம் விரைவில் குறையும்.
Pitham Kuraiya Tips:2
இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் இரண்டு நாட்கள் ஊற வைத்து பின் காலையில் எடுத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.