12 வயதுக்கு உட்பட்ட இலங்கை சிறுவர்களுக்கு வழங்கப்படும் இலவச வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடுவதற்கு இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலவச அனுமதி
மேலும், தெஹிவளை மிருகக்காட்சி சாலையுடன் இணைந்த நிறுவனங்ளையும் அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தேசிய மிருகக் காட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Shares