ஆண் டுக்கு ஒருமுறை விளைகின்ற கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

கே ழ்வர கு ஆண் டுக்கு ஒருமுறை விளைகின்ற தானியம் ஆகும். இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா. எனினும், இந்தியாவில் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கேழ்வரகு இந்தியா மற்றும் சீனா முதலான இடங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

குறிப்பாக இந்தியா வில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றது.

கேப்பை களி இல்லாத சமையலறையோ கேப்பைக் கூழ் இல்லாத அம்மன் கோவில் திருவிழாக்களோ நம் பா ரம்பரியத்தில் இருந்ததில்லை. அந்தளவு தமிழ் நிலத்தோடும் கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்புடையது கேழ்வரகு.

பொதுவாக தானிய வகை உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கப் பெறும்.

நமது அன்றாட உணவாக இருந்த சிறுதானியங்களில் கேழ்வரகு முக்கியம் இடம்பெறுகின்றது. ஆனால் இன்றோ காணக் கிடைக்காத அரிய வகை தானியமாக மாறிவிட்டது.

கேழ்வரகு நன்மைகள்
கேழ்வரகில் ஏராளமான சத்துக்கள் உண்டு. கல்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின், போலிக்கமிலம், பாலிப்பி னால்ஸ், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ஸ் போன்ற பல சத்துக்கள் உண்டு.

ஏனைய தானியங்களை விடவும் கேழ்வரகு அதிக கால்சியம், பாஸ்பரஸ் கொண்டது. இதனால் எலும்பைப் பலப்படு த்த உதவும். கேழ்வரகு உட்கொண்டு வந்தால் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், முதிவர்களின் எலும்பு வலிமைக்கும் உதவும்.

கேழ்வரகை வறுத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து குணம் அடையலாம்.

உணவுப் பொருட்களினால் ஏற்படும் வாந்தி பேதி போன்ற ஒவ்வாமைக்கு மாற்று உணவாக பயன்படுத்தலாம்.

கேழ்வரகு கர்ப்பினித் தாய் மார்களுக்கு சிறந்தது. மற்றும் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருந்தால் அதை சீர் செய்ய உதவுகின்றது.

45 வயதிற்குப் பின்னர் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வைக் குணப்படுத்த உதவுகின்றது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை சரி செய்யவும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

இரத்தச் சோகையில் அவதிப்படுபவர்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் கேழ்வரகை சாப்பிட்டு வந் தால் அதனை சீர்செய்ய முடியும். கேழ்வரகில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை உள்ளவர்களுக்கு நோயை குணப்படுத்த உதவும்.

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் என்பது கேழ்வரகில் அதிகம் நிறைந்துள்ளது. புற்றுநோய் செல்கள் சேதமடைவதல், வயது முதிர்ச்சி ஆகியவற்றிற்கு காரணம் அதிகப்படியான ஆக்சிடேஷன் இதனைக் கேழ்வரகிலுள்ள ஆன்டி-ஆக் சிடன்ட்கள் தடுக்கின்றன.

மறக்காமல் இதையும் படியுங்க   பல வருட கால்வலியும் 5 நிமிடத்தில் பறந்து போக பாட்டிவைத்தியம்

கோடை காலங்களில் கேழ்வரகை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டைத் தணித்து உடலைக் குளிர்ச்சியாக வைத் திருக்க உதவும்.

கேழ்வரகில் நார்ச்சத்து அதிக மாக இருப்பதால் செரிமானப் பிரச்சினைக்குச் சிறந்தது. உடலுக்குச் சக்தியளித்து உடலை உறுதியாக வைத்திருக்க உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *