எள்ளிலிருந்து பெறப்படுகின்ற நல்லெண்ணெய்யின் பயன்கள்
தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் ஒன்றாகும்.
இதனை எள்ளெண்ணை என்று கூறாமல் நல்லெண்ணெய் என்று கூறுவதன் காரணம் ஏனைய எண்ணெய்களை விடவும் அதிக நன்மை கொண்டதால்தான். உலகில் பல நாடுகளில் அதிகம் விளைவிக்கப்படும் ஒரு தானியமாக காணப்படுகின்றது.
உலகிலுள்ள மக்கள் தங்களது அன்றாட உணவு தயாரிப்பில் நல்லெண்ணெயை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதாலாகும்.
தோல் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துகின்றது. தோல் உடலைக் காக்கும் வெளிப்புறமாக உள்ளது. இத்தகைய தோலுக்கு நன்மை தரக்கூடியது தான் நல்லெண்ணெய்.
இதில் ஜிங்க் சத்து அதிகம் காணப்படுவதால் இது எமது உடலில் ஜவ்வுத் தன்மையை நீடிக்கச் செய்து மிருதுவான தோல் ஏற்பட உதவுகிறது. தோலில் ஏற்படும் தழும்புகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்குகின்றது.
கோடை காலங்களில் சூரிய வெப்பத்தில் இருந்து தோலைப் பாதுகாக்க சிறிதளவு நல்லெண்ணெய் எடுத்து தோலில் பூசினால் தோலை சூரிய கதிர்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
இதயம் ஆரோக்கியம் பெறவும், இதயப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. நல்லெண்ணெயில் செலமோன் மற்றும் செலமின் உட்பட பல கரைக்கப்பட்டாத கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
இவை தசைகள், நரம்புகள் போன்றவற்றிலுள்ள அதிக அளவில் கெட்ட கொழுப்பை கரைத்து இதயத்தை பாதுகாக்கும். எனவே தினமும் நல்லெண்ணெயில் சமைத்த உணவுகளை உட்கொண்டு வருவது நன்மை தரும்.
எலும்புகள் பலம்பெற கால்சியம் முக்கியம். நல்லெண்ணெயில் அதிகம் கால்சியம் இருப்பதால் எலும்புகளை பலம்பெறச் செய்வதுடன் எலும்புப்புரை நோய் வராமலும் தடுக்கின்றது.
பளபளப்பான சருமத்தைத் தரும். பளபளப்பான சருமத்துக்கு முக்கிய காரணம் பொலாஜின் உற்பத்தி சீராக இருக்க வேண்டும். நல்லெண்ணெயை தினமும் உடலில் சேர்ந்து வரும்போது பொலாயின் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் சருமம் பளபளப்பாகும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க செய்கின்றது. நல்லெண்ணெயில் ஆன்ட்டிபாக்ஸ்மாலிக் நிறைந்து காணப்படுவதால் சுவாச சம்பந்தமான பிரச்சினைகளை குணமாக்குகின்றது.
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும். நல்லெண்ணெயில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நீரிழிவினைக் கட்டுப்படுத்தும். அதாவது உணவில் தினமும் நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் இன்சுலின் சுரப்பை சீர்படுத்தும். இதனால் நீரிழிவு நோய் குணமாகும்.
உடற்சூட்டைத் தணிக்கும். உடல் சூட்டின் காரணமாக தலைவலி, சிறுநீர் எரிச்சல், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்லெண்ணெய்யை குடித்தாலோ அல்லது நல்லெண்ணெய் தேய்த்து குளித்தாலோ உடல் சூடு தணிவதுடன் உடல் சூட்டால் ஏற்படும் பிரச்சனைகளும் நீங்கும்.
புற்றுநோய் செல்களை அழிக்கின்றது. எல்லா வகையான புற்றுநோய்களையும் தடுப்பதில் நல்லெண்ணெய் சிறப்பாக செயல்படுகின்றது.
நல்லெண்ணெயிலுள்ள போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் தேவைக்கு அதிகமாக உள்ளதால் இவை இரண்டும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகும் புற்று நோய்களைத் தடுப்பதில் பேருதவி புரிகின்றன.
மேலும் இதிலுள்ள கால்சியம் வயிறு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
பற்கள் வலுப்பட உதவும். தினமும் காலை எழுந்தவுடன் பல் துவக்குவதற்கு முன்பாக ஒரு மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு இருபது நிமிடங்கள் வரை வாயில் வைத்து நன்கு கொப்பளித்து பின் பல் துவக்கினால் பற்சொத்தை ஏற்படாது. ஈறுகளில் ஏற்படும் வீக்கம், இரத்தம் வடிதல் குணமாகும். பற்களும் வலிமை பெறும்.
சுளுக்கு மற்றும் வீக்கத்தை போக்கும். எலுமிச்சை பழம் நான்கு அல்லது ஐந்து எடுத்து வெட்டி அதை நல்லெண்ணெயில் காய்ச்சி சுளுக்கு அல்லது வீக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வந்தால் சுளுக்கு வீக்கம் சரியாகும்.