தூதுவளை மூலிகையாகப் பயன்படுத்தப்படுகின்றது தூதுவளைக் கொடி மற்றும் இலைகள் போன்ற அனைத்திலும் வளைந்த முட்கள் கொண்டிருக்கும். அருகிலுள்ள செடிகளைப் பற்றிக்கொண்டு வளரக்கூடியது.
உருண்டை வடிவ பழங்களைக் கொண்டு காணப்படும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் இருக்கும். வெள்ளை நிற பூக்கள் பூக்கும் தூதுவளைகளும் உண்டு. எனினும் இது அரிதாகவே காணப்படுகின்றது.
இதற்கு தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்களுண்டு. தூதுவளையின் இலை, வேர், பூ, காய் என அனைத்தும் மருத்துவப் பயன்களை கொண்டனவாகக் காணப்படுகின்றன. கற்பக மூலிகைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
சளி, இருமல், ஜலதோஷம் போன்ற நுரையீரல் சார்ந்த நோய்களை போக்கும். தூதுவளையில் உள்ள சொலானின் சொலாசெரினின் என்ற வேதிப்பொருட்கள் சளியை நீக்க கூடிய சக்தியைக் கொண்டுள்ளன.
வாரம் ஒருமுறை தூதுவளை கீரையை சாப்பிட்டு வந்தால் மூச்சுப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கள் நீங்கும்.
ஆண்மைக் குறைவைத் தடுக்கும். தற்காலத்தில் ஆண்கள் பலருக்கும் நரம்புத் தளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டு இல்லற வாழ்க்கையில் முழுமையான இன்பத்தைப் பெற முடிவதில்லை.
இதனைப் போக்கிக்கொள்ள வாரத்தில் ஒரு முறையாவது தூதுவளை சம்பல் அல்லது தூதுவளையில் ஏதேனும் ஒரு உணவு சமைத்து உண்டால் ஆண்மை குறைபாடு நீங்கி ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும். இன்று வயது வேறுபாடின்றி பலரும் ஞாபக மறதி பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். எனவே அனைத்து வயதினரும் தூதுவளையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஞாபகசக்தி அதிகரிக்கும்.
மூளை நரம்புகள் வலிமை அடைந்து மூளையில் இருக்கும் செல்கள் தூண்டப்பட்டு நினைவாற்றல் பெருகும்.
பித்தத்தைச் சரி செய்யும். உடலில் பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம் முதலான பிரச்சனைகள் ஏற்படும். தூதுவளை உடலில் பித்த அதிகரிப்பு ஏற்படும் போது உடலிலுள்ள பித்த அதிகரிப்பை சமப்படுத்தி சீர்செய்வதில் சிறப்பாக செயல்படுகின்றது.
தூதுவளை இலையை நன்கு பொடியாக்கி அதை பசும்பாலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
இரத்தசோகை ஏற்படுவதிலிருந்து தடுக்கும். உடலிலுள்ள இரத்த அணுக்கள் குறையும் போது இரத்த சோகை ஏற்படுகின்றது. தூதுவளை சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
இரத்த சோகையைப் போக்க தூதுவளை பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கும்.
விஷக்கடியை சரி செய்யும். பூரான், தேள், விஷ வண்டுகள் போன்றவற்றினால் கடிபட்டால் உடனடியாக தூதுவளை இலைப் பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் விஷ ஜந்துக்கள் கடியால் உடலில் பரவும் விஷம் முறியும்.
காது மந்தம், வயிற்று மந்தம் முதலானவற்றையும் தடுக்கின்றது.
நீரிழிவைத் தடுக்கும். நீரிழிவுக்கு தூதுவளை சிறந்த மருந்தாக இருக்கின்றது. தூதுவளையிலுள்ள கசப்புத்தன்மை இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு ஏற்படாமல் தடுக்கின்றது.
மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர்சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர் போன்றவற்றினைச் சீர்செய்கின்றது. தூதுவளைக் காயை சமைத்தோ அல்லது வற்றல் ஊறுகாய் செய்து மண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் பித்த நீர் அதிகரிப்பு கண் நோய் நீங்கும்.
உடலுக்கு வலிமை கொடுக்கும். தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.
கண் எரிச்சல், கண் நோய் முதலானவற்றை தடுக்க உதவுகின்றது. தூதுவளை இலை வேர், காய் இவற்றை வற்றல் ஊறுகாய் செய்து நாற்பது நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.