Health

எள்ளு புண்ணாக்கின் நன்மையை அறிந்துகொள்ளுங்கள்

புண்ணாக்கு என்பது எண்ணெய்வித்து பயிர்களில் உருவாகும் விதையில் இருந்து எண்ணையை பிரித்தெடுத்த கழிவு. அவ்வகையில் எள்ளுப் புண்ணாக்கானது எள்ளிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் போது எண்ணெய் நீக்கிய எள்ளிலிருந்து இப்புண்ணாக்கு தயாரிக்கப்படுகிறது.

எள்ளு தமிழர்கள் அதிகம் உண்ணுவும் உணவுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது பழமையான எண்ணெய் விதைகளில் ஒன்றாகும். 3000 வருடங்களுயுக்கு முன்னரே பயிரிடப்பட்டுள்ளது.

இப்புண்ணாக்கில் 40% புரதம் உள்ளது. இப்புரதத்தில் லுயூசின், அர்ஜினின் மற்றும் மெத்தியோனின் அமினோ அமிலங்கள் அதிகமாகவும், லைசின் அமினோ அமிலம் குறைவாகவும் உள்ளது.

எள் புண்ணாக்கில் மூன்று வகைகள் உள்ளன. அவையாவன, சிவப்பு, கருப்பு மற்றும் வெள்ளை எள் புண்ணாக்குகளாகும். வெள்ளை எள் புண்ணாக்கு, சிவப்பு எள் புண்ணாக்கை விட அதிக சத்துகள் கொண்டது. இப்புண்ணாக்கில் பைடிக் அமிலம் அதிகமாக உள்ளது.

எள்ளு புண்ணாக்கு பயன்கள்
ஆண்மைக் குறைபாட்டை நீக்க உதவுகின்றது. எள்ளுப் புண்ணாக்கு 50g, முருங்கை இலை 50g, வெற்றிலை 5 ஆகிய 3 ஐயும் ஒன்றாகச் சேர்த்து கசாயம் காய்ச்சிக் குடித்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

எள் புண்ணாக்கு மலமிளக்கும் தன்மை கொண்டது.

மாடுகளுக்கு உணவாகப் பயன்படுகின்றது. இதை மாடுகளின் தீவனத்தில் 15% வரை சேர்க்கலாம்.

பயிர் வளர்ச்சிக்கு ஊக்கியாகச் செயற்படும். எள்ளு புண்ணாக்கு நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கும், மண்ணின் ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றது. இதனால் விளைச்சல் அதிகரிக்கும்.

கோழிக்குத் தீணியாகப் பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares