ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை தொடர்பில் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜேர்மன் பெடரல் கேபினட், கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்தி இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடியுரிமை மறுசீரமைப்பு சட்டத்தை அங்கீகரித்தது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

புதிய குடியுரிமைத் திட்டங்கள்
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் பலர், குடியுரிமைச் சட்ட மாற்றம் தொடர்பிலான செய்திக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய குடியுரிமைத் திட்டங்களின் கீழ், கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கவேண்டுமானால், அவர்கள் எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மாற்றி, ஐந்து ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்திருந்தால் போதும் என முடிவு செய்யப்பட உள்ளது.

ஜேர்மனியில் பிறக்கும் குழந்தைகள், அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது சட்டப்படி ஜேர்மனியில் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாக வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அந்தக் குழந்தைகள் தானாகவே ஜேர்மன் குடிமக்களாக ஆகிவிடுவார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள்
ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட குடியுரிமைகள் வைத்திருக்க அனுமதியளிக்கப்பட உள்ளது.

மேலும், 67 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், ஜேர்மன் மொழித்தேர்வை எழுதுவதற்கு பதிலாக, அது அவர்களுக்கு வாய்மொழித்தேர்வாக மாற்றப்பட உள்ளது.

இந்த சூழ்நிலையில், ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ், தான் அதிக வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறுவதைக் காண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares