கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் தனியார் நிறுவனமொன்றை நடத்தி 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக நிதி மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை கைது செய்வதற்கு கண்டி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை வீதியில் உள்ள மூன்று மாடிக்கட்டிடத்தில் தனியார் நிறுவனமொன்றை நடத்தி 05 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி மோசடி செய்த கணவன் மற்றும் மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
நிதி மோசடி
காணி, பொதிகள் மற்றும் வெளிநாட்டு வேலைகளை பெற்று தருவதாக கூறி இந்த தம்பதியினர் செய்த நிதி மோசடி தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவுக்கு சுமார் 09 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தனியார் நிறுவனமொன்றின் உரிமையாளரான முத்துதந்திரிகே ஜூட் பெர்னாண்டோ தம்பதியினரும் அவரது மனைவி ஈ.எச். ஸ்ரீமதி திஸ்ஸகுமாரி தலைமறைவாக இருந்ததால், அவர்களைக் கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவி கோரி அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்களது இருப்பிடம் அல்லது வேறு ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் கண்டி பொலிஸ் தலைமையகத்தின் 0718591045 அல்லது 0812222222 ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.