உடற்பயிற்சி செய்வ.தால் ஏற்படும் ந.ன்மைகள்

உடற்பயிற்சி என்பது எமது உடல் நலத்தினை ஆரோக்கியமான நிலையில் பேணுவதற்கு உதவுகின்ற செயற்பாடுகளுள் ஒன்றாகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல்,குதித்தல், விளையாடுதல், நடனமாடுதல் மற்றும் யோகாசனம் செய்தல் போன்ற அனைத்து உடலசைவுகளும் உடற்பயிற்சிகளே.

தினசரி நாம் 45 நிமிடம் 1 மணித்தியாலம் உடற்பயிற்சி செய்தல் வேண்டும். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்ன என்பதனை பற்றி ஆராய்வோம்.
உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

உடல் எடை குறைவடையும்.
அதிக எடை உள்ளவர்கள் தினசரி உடற்பயிற்சியை மேற்கொள்கின்ற போது, தேவையற்ற கலோரிகள் குறைவடைந்து உடல் எடை குறைகிறது மற்றும் உடல் கட்டமைப்பாகவும் அமைகிறது.

புத்துணர்வு ஏற்படுகிறது.
உடற்பயிற்சி செய்கின்ற போது உடலிலும், மனதிலும் காணப்படும் சோர்வு நிலை நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது. இதன்மூலம் சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது.

ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.
தினசரி உடற்பயிற்சி செய்கின்றபோது ரத்த ஓட்டம் அதிகரித்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. இதன் மூலம் உடல் வேகத்துடன் செயல்படுகிறது.
நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

அதிக ரத்த அழுத்த நோய், இதய நோய், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு சத்துள்ளமை போன்ற நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சியினை செய்கின்றபோது இந்நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிகின்றது.

மன ரீதியான நன்மைகள் ஏற்படும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது மூளைக்கு ஆக்சிடோசின்( oxytocin), செர்டோரின் (serdonine) போன்ற கெமிக்கல் உருவாகிறது. இவை மனதில் மகிழ்ச்சி உணர்வை ஏற்படுத்துகிறது.

மூளை, மனநிலையை மகிழ்சியாக வைத்திருப்பதற்கு உதவும் மற்றும் மனதில் உள்ள எதிர்மறையான சக்திகள் வெளியேற்றப்பட்டு நேரான சக்திகள் தோற்றம் பெறுவதற்கும் உடற்பயிற்சி உதவுகிறது.

பதட்டம் குறைவடையும்.
உடற்பயிற்சி செய்யும்போது பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதன்மூலம் எம்மிடையே ஏற்படும் தேவையற்ற பதட்ட நிலை என்பது குறைவடைகிறது.

உடல் உறுதியாக காணப்படும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்றபோது எமது உடலின் உறுதி அதிகரிக்கின்றது. இதன் மூலம் எவ்வேலையையும் சோர்வடையாமல் செய்ய முடிகிறது.

நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடற்பயிற்சி செய்கின்றபோது பலவித கலோரிகள் அகற்றப்பட்டு பலவித ஓமோன்கள் சுரக்கப்படுகிறது. இதன் மூலம் எம்மிடையே நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கின்றது. இலகுவாக நோய்வாய்ப்படுவதிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares