மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாதவை பற்றி உங்களுக்கு தெரி யுமா

மாதவிடாய் என்பது அல்லது மாதவிலக்கு என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

மாதவிலக்கு சமயத்தில் பெண்ணின் நலனுக்காக, கர்ப்பப்பையின் ஆரோக்கியத்துக்காக சிலவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது. மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாதவை பற்றி இப்பதிவில் காண்போம்.

மாதவிடாய் காலத்தில் செய்ய கூடாதவை
கடுமையான வேலைகளை செய்ய கூடாது

மாதவிலக்கு காலங்களில் பெண்கள் கடுமையான வேலைகளை செய்ய கூடாது. அவ்வாறு கடுமையான வேலைகளை செய்தால் கருப்பையானது தளர்ந்து கீழிறங்கும் வாய்ப்பு உள்ளது.

சுகாதாரம் முக்கியம்
மாதவிலக்கு காலங்களில் சுத்தமாக இல்லாவிடின் தூங்கும்போதோ, அமர்ந்திருக்கும்போதோ ரத்தப்போக்கின் வாசத்தை பூச்சிகள் அறிந்து, கடித்துப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஓய்வு எடுப்பது நல்லது
மாதவிடாய் காலங்களில் கர்ப்பப்பைக்கு கூடுதலான ரத்த ஓட்டம் அவசியம். இதற்கு, பெண்களின் பிற உறுப்புகளுக்கு ஓய்வு தர வேண்டும். இதனால்தான் மாதவிலக்கான பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

தாம்பத்தியம்
பெண்களின் வலி மிகுந்த மாதவிடாய் நாட்களில் தாம்பத்தியத்தை தவிர்ப்பது நல்லது. இக்காலப்பகுதியில் உடலுறவு கொள்வது தவறில்லை என மருத்துவர்கள் கூறினாலும், தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

தலையில் ஷாம்பு பயன்படுத்தக்கூடாது
மாதவிடாய் காலங்களில் தலையின் துளைகள் திறந்து இருக்கும். இதனால் ஷாம்பு பயன்படுத்தும் போது அது தலைவலியை ஏற்படுத்தும்.

நீண்ட நேரம் ஒரே பேடை உபயோகிக்கக்கூடாது
நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே பேடை பயன்படுத்தும் போது யோனிப் பகுதியில் நோய்த் தொற்றுகள் மற்றும் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இரத்தக்கசிவு உள்ளதோ இல்லையோ, 3-5 மணிநேரத்திற்கு ஒருமுறை பேடை மாற்ற வேண்டியது அவசியம்.

கடுமையான உடற்பயிற்சி செய்யக் கூடாது
இக்காலப்பகுதியில் உடல் சோர்வு ஏற்படுவதால் உடலுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகளை கொண்டு வரும். எனவே அந்த நாட்களில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது.

உணவு வேளைகளை தவற விடக்கூடாது
இக்காலத்தில் ஆற்றல் குறைவாக இருப்பதோடு, இரத்தமும் வெளியேறி இருக்கும். எனவே உடலுக்கு அதிக சக்தி தேவைப்படும். காலை, மாலை மற்றும் இரவு உணவுகளை தவறவிட்டால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

பால் பொருட்கள் எடுத்துக்கொள்ளல் கூடாது
பால் பொருட்களில் உள்ள அராசிடோனிக் அமிலம் உள்ளதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை மோசமாக்கும்.

வெள்ளரிக்காய் சாப்பிடக்கூடாது
வெள்ளரிக்காயில் உள்ள சப்பை கருப்பை சுவரில் ரத்தம் கழிவுகளை தடுக்கும். எனவே மாதவிடாய் காலங்களில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Shares