துத்தி வேர், பூ, இலை, மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடி இதன் பயன்கள் உங்களுக்கு

துத்தி கீரை வகையைச் சேர்ந்தது. மற்றைய கீரைகளைப் போலவே இதனையும் பொரியல், கடையல் செய்து சாப்பிடலாம். தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் இந்த துத்திக்கீரை படர்ந்து கிடைக்கிறது.

பனியாரத்துத்தி, காட்டு துத்தி, பொட்டகத் துத்தி, கொடி துத்தி, ஒட்ட துத்தி, எலிச் செவிதுத்தி, கருந்துத்தி, பசுந்துத்தி, சிறு துத்தி, பெருந்துத்தி, நிலத்துத்தி, கண்டு துத்தி, இதழ் துத்தி எனப் பல வகை பெயர்கள் இந்த கீரைக்கு உண்டு.

இதன் வேர், பூ, இலை, மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடியாகும்.

துத்தி இலையின் பயன்கள்
மலத்தை இளக்கி வெளியேற்றும். துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உணவு ஜீரணமாகும். மலச்சிக்கலைப் போக்கும்.

துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

இரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தையும் குணமாக்கும். இதற்கு துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டிக் கொண்டால் மூலச்சூடு நீங்கும்.

ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்துசாப்பிட குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சினையைக் குணப்படுத்தும். இப்பிரச்சினையைப் போக்க துத்தி இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அல்லது துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலியைக் குணமாகும். அதிகம் வேலை செய்தாலோ அல்லது தூரப் பயணம் செய்தாலோ உடல்வலி ஏற்படும். இந்நேரங்களில் துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடலில் உள்ள தசைகளுக்குப் பலத்தை அளிக்கக் கூடியது. இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

படர்தாமரை நோய்க்கு சிறந்த மருந்தாகும். துத்தி இலையை அரைத்துப் பூச நன்கு குணமாகும்.

துத்தியிலை கருப்பை சார்ந்த நோய்களுக்கு நல்ல தீர்வாகச் செயற்படும். சிறுநீர் பிரிய உதவும்.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி

உடல் சூட்டாலும், குறைவாக நீர் அருந்துவதாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது இதனைப் போக்க துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

பல் ஈறுகளில் ஏற்படும் வலி, வீக்கம் போன்ற நோய்களைக் குணமாக்கும். துத்தி இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares