உறவுகள் முன்பு முத்தமழை கொடுத்த கல்யாண ஜோடி… என்னம்மா இப்படி கிளம்பிட்டீங்க..!

கல்யாண வீடுகள் முன்பெல்லாம் பாரம்பர்ய கலாச்சாரத்துக்கே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் அதை கலர்புல் விசேசமாகவே மாற்றிவிட்டார்கள். அதேபோல் முன்பெல்லாம் செல்போன், வாட்ஸ் அப் பேஸ்புக் என பெரிய அளவில் தகவல் பரிமாற்றங்கள் இருந்தது இல்லை. இதனால் மணப்பெண்கள் தங்கள் தாய் வீட்டை நினைத்து பிரிந்து செல்வதை பெரிய சோகமான சம்பவமாக உணர்ந்தார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படியாக இல்லை.

தகவல் பரிமாற்றம் மிக எளிதாகி விட்டது. இதனால் திருமணம் இப்போதெல்லாம் ஜாலியாகிவிட்டது. அதிலும் திருமணத்தில் போட்டோ, வீடியோகிராபர்கள் செய்யும் சேட்டைகளும் கொஞ்சம், நஞ்சம் இல்லை. வித்தியாசமாக ஏதாவது செய்கிறேன் என்னும் பெயரில் அவர்கள் புதிதாக ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். மணமக்களை ஆடவைப்பது, நடிக்க வைப்பது, கலாட்டா செய்வது என சினிமா இயக்குனர்களுக்கே சவால்விடும் வகையில் யோசிக்கின்றனர். அந்தவகையில் இங்கே ஒரு வீடியோகிராபர் செய்த வேலை இணையத்தில் தீயாகப் பரவிவருகிறது

கேரளத்தில் ஸ்ரீநிதின் என்னும் மாப்பிள்ளைக்கும், ஸ்ரீலெட்சுமி என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயித்து இருந்தார்கள். திருமண மேடையில் செம ரசனை, ரகளையாக இருக்க வேண்டும் என பாக்கு வெத்தலை மாற்ற இப்போ பாடலுக்கும் வீடியோ செய்து ஆடினர். இதில் பாடல் முழுவதுக்கும், உறவுகள் முன்பே துளியும், தயக்கம் இன்றி மாப்பிள்ளையும், பொண்ணும் முத்த மழை பொழிந்து கொண்டே இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி கட்டி பிடிப்பதும் தொடர்ந்தது. சரி இதையெல்லாம் எப்படி குடும்பத்தோடு இருந்து ப்ளே செய்து பார்ப்பார்கள்? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Shares