மன அழுத்தத்தை எவ்வாறு குறைத்துக்கொள்ளலாம்

மனஅழுத்தம் (Stress) என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச் செயலை செ ய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்விளைவு அல்லது பின்விளைவாகும்.

குடும்ப சூழ்நிலை, அலுவ லகப் பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மன அழுத்தம் ஏற்படுகின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 – 90 வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன.

மைக்ரேன் எனப்படும் ஒ ற்றைத் தலைவலி, ஸ்ட்ரோக், எஸீமா, அஜீரணக் குறைபாடுகள், தூக்கமின்மை, தசைப்பிடிப்பு, உடல் வலி, நெஞ்சு வலி, சீரற்ற இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், குறைதல், ஆஸ்த்மா, மூச்சுத் திணறல், தோல் நோய்கள், தாம்பத்தியக் குறைபாடுகள், புற்று நோய், அல்சர், சர்க்கரை நோய் உட்பட பல நோய்களை மன அழுத்தம் கொண்டு வருகிறது.

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி
மன அழுத்தத்தைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில் எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும் போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான் என்கின்றனர். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மன அழுத்த நாட்களில், ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அடைய மன அழுத்த மேலாண்மை மிகவும் முக்கியமானது.

மன அழுத்தம் குறைய மிகவும் எளிமையான வழி உடற்பயிற்சியாகும். தினமும் செய்யும் உடற்பயிற்சி உடலை புத்துணர்வோடு மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நடைபயிற்சி ஒரு சிறந்த உடல் உடற்பயிற்சி. மேலும் எதிர்மறை எண்ணங்களை குறைக்கவும் உதவுகின்றது.

தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில வழிமுறைகளாகும்.

மனதை ஒருநிலைப்படுத்துவதால் சக்தி மிக்க நேர்மறை விளைவுகள் மனதில் அதிகரிக்கிறது.

நமது உடல் இயக்கம் நன்றாக வேலை செய்ய மூளைக்கு தேவையானவைகளில் முக்கியமானவை ஊட்டச்சத்துக்கள் ஆகும். மூளையின் செயல் திறனுக்கு தேவையான சத்துக்களாக பல உள்ளன. ஒமிக்ரான்3, அமி னோ அமினங்கள் விட்டமின் B, விட்டமின் C, துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாது உப்புக்கள் ஆகும். இவைதான் வலிமையான மனதில் ஆரோக்கியத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றன.

மத்திய தரைக் கடல் நாடுகள் உணவாகப் பயன்படுத்தும் ஆலிவ் எண்ணெய், பசுமையான இலைகளைக் கொண்ட கீரை வகைகள், காய்கறிகள் போன்றவைகளில் மனநல ஆரோக்கியத்தை உருவாக்கும் சத்துக்களை கொண்டுள்ளன.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி

இந்த உணவு மு றைகளை கடைபிடித்தவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

ஒரு மனிதன் மன அழுத்தத்தில் இருக்கும்போது புகைப்பிடிக்கும் செயலில் ஈடுபடுகின்றான். இத்தகைய செயல் வ லிப்பு நோய்க்கு காரணமாகின்றது. மூளைப் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது மன அழுத்தத்தை குறைப்பதற்கான ஒரு வழிமுறையாகும்.

வேலையைத் தொடர் ச்சியாகச் செய்துகொண்டிருப்பவர்க்கு, வேலைக்கு மத்தியில் சிறிது நேரம் ஓய்வு தேவை. இது உடல் மற்றும் மனதைப் புத்துணர்வோடு வைத்திருக்க உதவுகிறது.

இவைதவிர ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டுடன் உடல் நலனில் அக்கறையோடு இருப்பது மிகமிக முக்கியமானதாகும்.

முக்கிய குறிப்பு : தேவைக்கு ஏற்ப வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares