முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கு. முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும். முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு.
இது தன்னிச்சையாக வளரக்கூடிய ஒன்றாகும். பொதுவாக இக்கீரை தமிழகம், வங்காளம் முதலிய இடங்களில் நன்கு வளர்கின்றது. இந்தியா மட்டுமன்றி இலங்கை, மலேசியா முதலிய நாடுகளிலும் இக்கீரை கிடைக்கின்றது
முடக்கத்தான் கீரை பயன்கள்
இடுப்புப் பிடி ப்பு, இடுப்புக் குடைச்சல், கை-கால் வலி, கை-கால் குடைச்சல் போன்றவற்றிற்கு முடக்கத்தான் கீரை மருந்தாக உதவுகின்றது.
காது வலியை நீக்கும். இக்கீரையை வதக்கிப் பிழிந்து சாறை இரண்டு அல்லது மூன்று துளிகள் காதில் விட காதுவலி, காது குத்து, சீழ்வடிதல் முதலியன நீங்கும்.
மூல நோய்களுக்கும் இக்கீரை சிறந்த மருந்தாகும். பச்சையாக முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது. முடக்கத்தான் கீரையை இடித்துப் பிரசவிக்கும் நிலையிலுள்ள பெண்ணின் அடிவயிற்றில் கட்டுவதினாலும், இலையின் சாறை பூசுவதினானும் சிறிது நேரத்திற்குள் சுகப்பிரசவம் ஆகும்.
குழந்தை பெற்ற பெண் களுக்கு முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து குழந்தை பெற்ற அடிவயித்துல பூசி வந்தால் கருப்பையில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
வாத வலிகளைச் சீர்செய்கின்றது. இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் வாதவலி சரியாகும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டு செய்து சாப்பிட்டால் அல்லது கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிடுட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மலச்சிக்கலைக் குணமாக்கும். முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் இருப்பதால் இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்களைச் சீர்செய்யும். பாதிக்கப்பட்ட இடங்களில் முடக்கத்தால் இலையில் பற்று வைத்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
ஜலதோஷத்தால் ஏற்படும் த லைவலிகளைப் போக்கும். முடக்கத்தான் இலைகளை நன்றாகக் கசக்கி, வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் தலைவலி சரியாகும்.
பொடுகுத் தொல்லையைப் போக்கும். எண்ணெய்யில் முடக்கத்தான் இலைகள் சேர்த்து தலைக்குத் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
புற்று நோய்களைக் குணமாக்கும். உடலில் புற்று செல்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டியிருப்பதைத் தடுக்க முடக்கத்தான் கீரையைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் புற்று நோயின் கடுமை தன்மை குறையும்.
இளமையுடன் வாழ வழிவகுக்கும். இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இவை உடலில் ஏற்படும் பிரீராடிகள் என்னும் செல் அழிவு ஏற்படாமல் காக்க உதவும்.
வயிற்றுப்புண் மற்றும் அ ல்சர் போன்ற பிரச்சினைகளைக் குணமாக்கும். தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை உட்கொண்டு வந்தால் அல்சர் பிரச்சினை முற்றிலுமாக விரைவில் குணமாகும்.
முக்கிய குறிப்பு : தேவைக்கு ஏற்ப வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.