பெருங்காயத்தின் நன்மைகளை வாருங்கள் பார்ப்போம்

இது பெர்சியாவைஈரான்பிறப்பிடமாகக் கொண்ட பெருங்காய இனம் ஆகும். பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கின்றது. ஆனால் இது சமைத்த உணவுகளில் மென்மையான சுவையை வழங்குகின்றது. இது வெங்காய இனப் பூண்டுகளின் மணத்தை நினைவூட்டுகின்றது.

இந்தச் செடியின் வேர் மிக அகலமாக இருக்கும். இந்த செடி சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடன் அதன் தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதில் வடியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காய வைப்பார்கள். அதுதான் பெருங்காயம் எனப்படுகிறது. பெருங்காயத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

பெருங்காயம் நன்மைகள்
செரிமான மண்டலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்கிறது. வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தணிக்க இது உதவுகிறது. பெருங்காயமானது, ஆன்டி ஸ்பாஸ்மோடிக் மற்றும் ஆன்டி இன்பிளாமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. வீக்கம் மற்றும் வாய்வு போன்ற செரிமான சிக்கல்களைத் தீர்க்க உதவுகிறது.

தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் தீரும். மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

நரம்பு பிரச்சனைகளை தீர்க்கும். சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மற்றும் மார்பு நெரிசலைக் குறைக்கிறது. மேலும், கபத்தை விடுவிக்கவும் இந்த பெருங்காயம் பெரிதும் உதவுகிறது.

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள், நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புசளியினை வெளியேற்றுகிறது. மார்புவலி, மூச்சுக்குழல் அழற்சி, கக்குவான் இருமல் ஆகியவற்றை போக்க உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தத்தினை குறைத்து இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. இரத்த உறைவதை இயற்கையாகவே தடுக்கும் திறன் கொண்டது. மற்றும் இரத்த அழுத்த அளவைக் குறைக்க இது உதவுகிறது. இதில் கூமரின் என்ற ஓர் கலவை உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இரத்த உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் பெற உதவுகிறது. ஒரு கப் மோரில், ஒரு சிட்டிகை பெருங்காயம், வெந்தயம் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதை மாதவிடாய் காலத்தில் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தலைவலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. சிறிது தண்ணீரில் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து அதனை சூடாக்கி எடுத்து அந்த கரைசலை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர வேண்டும். பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால் தலைவலி மற்றும் கடுமையான ஒற்றை தலைவலி நீங்கும்.

எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல் வலி நீங்கும்.

பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களைப் பாதுகாக்கும்.

முக்கிய குறிப்பு : தேவைக்கு ஏற்ப வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares