மூளையை பல.ப்படுத்தும் உண.வுகள்

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும்.நம்முடைய உடலில் காணப்படும் எல்லா உறுப்புக்களையும் இயக்குவது மூளை ஆகும். அத்தகைய மூளை ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே மூளை வினைத்திறனுடன் செயல்பட முடியும்.

முந்திரி, வால்நட் மற்றும் பாதாம்
முந்திரி, வால்நட், பாதாம் போன்றவற்றில் விற்றமின் A, மக்னீசியம், செலினியம், போலட், போலிக் அமிலம், மெலட்டோனின், கோலின், ஒமேகா3 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த ஊட்டச்சத்துக்கள் மூளையினது வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலங்களது பாதுகாப்புக்கும் பெரிதும் உதவுகின்றன. இவற்றை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடுதல் நன்று. இவை மன அழுத்தத்தைக் குறைக்க கூடியவை.

மஞ்சள்
மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனப்படும் பதார்த்தம் மறதியை குணப்படுத்த கூடியது. தினமும் சிறிய அளவு உணவில் சேர்த்து கொள்ளுதல் நன்று.

மனதில் சீர்ப்படுத்தும் தன்மையை கூட்டுவதோடு மூளையின் வளர்ச்சி ஹோர்மோனினது செயற்பாட்டை அதிகரிக்கும். அளவுக்கு மீறி உண்டால் பித்தப்பை பிரச்சனைகள் உருவாகும்.

முட்டை
முட்டையில் புரதம் போன்றன அதிகளவில் காணப்படுவதால் மூளையின் அறிவாற்றல் அதிகரிக்கும். மேலும் ஞாபக மறதி போன்ற நோய்களை குணப்படுத்த வல்லது.

மீன்கள்
எண்ணெய் சத்து நிறைந்த மீன்களில் ஒமேகா 3, கொழுப்பு, தோரின் அமிலம் போன்றன அதிகளவில் காணப்படுகின்றன.

இதனால் இவற்றை அதிகளவில் உண்பதால் நினைவாற்றல் அதிகரிப்பது அதுமட்டுமல்லாமல் அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்கள் வருவதை தடுக்கும் தொடர்ச்சியாக உண்டு வர உடல் எடை அதிகரிக்கும்.

கீரை
கீரையில் உள்ள கனியுப்பு, இரும்பு, விற்றமின் போன்ற ஊட்டச் சத்துக்கள் செரடோன் எனப்படுகின்றன ஹோர்மோனைத் தூண்டுவதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாக்கப்படுகிறது. கீரை இரத்த ஓட்டத்தை சீர்ப்டுத்தும் மறதி, மனநோய், பக்கவாதம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க வல்லது.

ஈஸ்ட்
ஈஸ்ட்டில் இருக்கும் விற்றமின் சத்து மனநிலை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க கூடியது. அதுமட்டுமல்லாது இது மூளையினுடைய ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது. அத்துடன் அவதானிக்குமு திறன், பக்கவாதப் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.

இத்தகைய ஈஸ்ட் பாண், இட்லி, தோசை போன்ற உணவுகளில் காணப்படுகிறது. கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களெ சிறிதளவு உட்கொள்ளுதல் சிறப்பானது.

காலி பிளவர் மற்றும் புரோலி
காலி பிளவர், புரோலி போன்றவற்றில் கோலின், விற்றமின் B, B6 போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நினைவுத்திறன், கவனிக்கும் ஆற்றல் போன்ற திறன்கள் அதிகரிக்கின்றன.

அத்துடன் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இவற்றை அளவோடு உண்ணுதல் சிறந்தது. ஏனெனில் அளவுக்கு மீறி உண்பதால் வாயுத் தொல்லை அதிகரிக்கும்.

சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் அதிகளவு இரும்புச் சத்து மற்றும் Antioxidants உள்ளன. இவை மூளைக்கு மிகவும் நல்லன. தினமும் சிறிதளவேனும் உண்ணுதல் நன்று.

குங்குமப்பூ மற்றும் இஞ்சி
குங்குமப்பூ, இஞ்சி போன்றனவற்றில் அழற்சி எதிர்ப் பண்புகள் அதிகளவு காணப்படுவதால் இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன. அத்துடன் மூளையின் இயக்கத்தை சீர்ப்படுத்துகின்றன.

அவகோடா
அவகோடாவில் அதிகளவு மக்னீசியம் அதிகளவில் காணப்படுகிறது. அத்துடன் இது மூளையின் ஆரோக்கியத்திற்கு அதிகளவில் பங்களிப்பு செய்கிறது.இது மூளையின் செயற்பாடுகளை வினைத்திறன் ஆக்குகிறது. வாரத்தில் ஒரு முறையேனும் அவகாடோ உண்பது சிறந்தது.

நம்முடைய மனநலம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மூளையே நிர்ணயிக்கும். மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பது சிறப்பானதாகும். மூளையை பலமாகும் வைத்திருப்பதற்கு மேற்குறிப்பிட்டவற்றை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Shares