மாத விடாய் காலத் தில் பெண் கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ன…?
பெண் கருத்தரிக்காத நேரங்களில் இம்மடிப்புகளில் உள்ள தேவையற்ற இழையங்களும், அவற்றுடன் சேர்ந்து மடிப்புக்கள் இருக்கும் நுண்ணிய குருதிக் குழாய்களிலிருந்து வெளிவரும் குருதியும் வெளியே கழிவாக தள்ளப்படுகிறது. இந்நிகழ்வு மாதந்தோறும் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதனையே மாதவிடாய் என்கிறோம்.
எல்லா பெண்களும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைத்த பின் முதிர்வு அடைந்து பூப்படைந்து விடுகிறார்கள்.
இது பெண்களை உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் மன ரீதியாக கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற தாமதம் முக்கிய பிரச்சனையாகும்.
இதனால் சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர நடைப்பெறுவதில்லை. பெண்களுக்கு வழக்கமான இடைவெளியில் மாதவிடாய் அடைதல் அல்லது தள்ளிப்போவதை சரிசெய்யவும், விரைவில் கொண்டுவரவும் பல செயல்களில் ஈடுபடுகின்றனர். முறையான சுழற்சியில்லாமல் இது போன்ற செயல்களால், சுழற்சியை முன்னதாகவே தனது மாதவிடாய் காலத்தை முடித்துக் கொள்கின்றனர்.
மாதவிடாய் காலத்தில் போது பெண்கள் பெரும்பாலும் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
மன அழுத்தத்தின் போது அவர்கள் தசைப்பிடிப்பு மற்றும் வயிற்று வலி, மூட்டு மற்றும் இடுப்பு வலி மற்றும் சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
சில பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு பின்னால், அவர்களின் உணவிலும், உடல் அளவிலும் பல காரணங்கள் உண்டு.
அதற்கு சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளாததும் ஒரு காரணமாகும்.
தாமதமான மாதவிடாய் காலங்களுக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் குறைந்த அல்லது அதிக உடல் எடை, மன அழுத்தம், தைராய்டு சிக்கல்கள், நீரிழிவு நோய் ஆகியவையும் காரணமாகிறது.
மாதவிடாய் நாட்களில் கால்களில் வலி, அடி வயிற்றில் அதிக வலியும் இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளையும், கீரைகளை அதிக அளவிலும் எடுத்துக்கொள்வது நல்லது. மாதவிடாய் சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.