நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.
நாவல் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் சுருக்கங்கள் மறைந்து பொலிவு பெறும்.
நாவல் பழம் சாப்பிடுவது வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நாவல் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வெண்புள்ளி, அரிப்பு உள்ளிட்ட தோல் சார்ந்த நோய்களை சரிசெய்யும் தன்மை நாவல் பழத்திற்கு உண்டு.
நாவல் பழத்தில் செய்யப்பட்ட வினிகரை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினைகள் தீரும்.
நாவல் மர இலையை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை அகலும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).