ஓமவள்ளி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவைகளை நன்குக் கலந்து நெற்றியில் பற்றுப்போடத் தலைவலி நீங்கித் தலையில் உண்டான சூட்டைத் தணிக்கும்.
இந்த இலைகளையும், காம்புகளையும் கியாழமிட்டு குழந்தைகளுக்குக் கொடுக்க இருமல், கபசுரம், போகும்.
கஸ்தூரி மாத்திரை, கோரோசனை சேர்த்துக் கொடுத்தல் சிறப்பாகும்.
ஓமவல்லி இலையை பச்சையாகவோ அல்லது, உலர்ந்த வடிவத்திலோ சாப்பிடலாம். அல்லது எண்ணெயாகக் (கற்பூரவள்ளி எண்ணெய்) கூடப் பயன்படுத்தலாம்.
நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும்
ஒருவர் ஓமவல்லி இலையைத் தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பலமாகும். உடலைத் தாக்கக் கூடிய நோய்களின் எண்ணிக்கையும் குறையும்.
ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது
பலரும் அதிகமாக எடுக்கத் தவிர்க்க கூடிய அத்தியாவசியமான விட்டமின் K இந்த இலையில் அதிகமாக உள்ளது. விட்டமின் மு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது. முகப்பருவை நீக்க முகப்பொலிவை பேணவும், முதுமைத் தோற்றத்திலிருந்து பாதுகாக்கவும் சரும நோயைத் தடுக்கவும் ஓமவல்லி இலை உதவுகின்றது.
கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்
ஓமவல்லி இலையைத் தின மும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
கீழ்வாத நோயைக் கட்டுப்படுத்தும்
ஓமவல்லி இலையை உட்கொள்வதன் மூலம் முழங்கால் மற்றும், மூட்டுக்களில் ஏற்படும் வலிப்பிரச்சினையைப் போக்கும்.
அஜீரணக் கோளாறு பிரச்சனை தீரும்
சிலருக்குச் சில வகையான உணவுகள் அதிகளவிலும் நேரம் கடந்தும் சாப்பிடும் போது அஜீரண பிரச்சனையை ஏற்படுகின்றது. இதனைப் போக்க ஓமவல்லி இலையினைத் தினமும் சாப்பிட்டு வந்தால் அஜீரணப் பிரச்சினையைத் தீர்ப்பதுடன், செரிமான மண்டலத்தையும் பலமாக்கும்.
இருமல், சளியை கட்டுப்படுத்தும்
ஓமவல்லி இலையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உண்டு வந்தால், அனைவருக்கும் இருக்கும் சளி, இருமல், தொல்லைகள் நீங்கும்.
மேலும் சுவாசப் பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதனை தடுக்க இயற்கையாக கிடைக்கும் சிறந்த மூலிகை இலை இதுவாகும். ஓமவல்லி இலையின் சாற்றினை எடுத்து தேனுடன் கலந்து கொடுத்தால் மழலையின் இருமல் குணமாகும்.
வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஓமவல்லி இலையைப் பயன்படுத்தலாம்.
தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்
நரை முடியைக் கருப்பாக மாற்றுவதற்கு ஓமவல்லிப் பேஸ்ட் பயன்படுத்தப்படுகின்றது.
கிருமிநாசினி சிறந்த கிருமி நாசினியாகவும் இது பயன்படுகின்றது. உணவாகப் பயன்படும்
ஓமவல்லி இலைகளானவை மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் அதேவேளை உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடியது. சட்னி, செய்ய பழச்சாறு தயாரிக்க, கசாயம், பஜ்ஜி போன்றவற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது. ஆயுர்வேதம் மருந்துகள் தயாரிப்புகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிறுநீரகத்தின் நலனைப் பேணும்
சிறுநீரகங்களில் அதிக அளவில் சேரும் உப்புக்களை கரைத்து சிறுநீரகங்களின் நலனை பேணுகின்றது.
மன அழுத்தத்தைப் போக்கும்
NCBI இன் அறிக்கையின் படி ஓமவல்லி இலையானது மன அழுத்தத்திற்கு மற்றும் மனச் சோர்வினால் பாதிக்கப்படுபவர்களிற்கு சிறந்த மருந்தாகக் கருதப்படுகின்றது.
முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).