மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வா யிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது.
மூல நோய் மலச் சி க்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது.
மூல நோயை உள் மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது.
மூல நோய் க்கான காரணங்கள்
உணவு பழக் க வழக்கம் தான் முதன்மை காரணமாகும்.
நார் ச்சத்து குறைவான உணவுகளை உண்ணுதல்
பொரித்த உண வுகளை உண்ணுதல்
மதுபான பாவ னை
அதிக மாமிசங்களை உண்பது
துரித உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது
அதிக நேரம் ஒரே இட த்தில் இருந்து வேலை பார்ப்பது
மலம் கழிக்கும் போது முக்கி வெளியேற்றுவது
அறிகுறிகள்
மலம் கழிக் கும் போது தாங்க முடியாத வலி, ஆ சனவாயில் கட்டி, மலம் கழிக்கும் போது இரத்தம் வெளியேறுதல், ஆசனவாய் அரிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும்.
மூல நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்
பொதுவாக குளிர்ச்சி தன்மை கொண்ட உணவுகளை உடலில் சேர்க்கும் போது மூலநோய் குணமடையும்.
பழங்கள்
பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் மூல நோயை குறைக்கலாம். ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, முலாம்பழம், அவகோடா, பப்பாசி பழம், பேரிக்காய், மாதுளை போன்றவற்றையும், சிற்றிக்கசிட் கொண்ட பழங்களான எலுமிச்சை, சாத்துக்குடி சப்போட்டா, திராட்சை முதலான பழங்களையும் உணவில் சேர்ப்பதன் மூலமாக மூலநோய் குறையும்.
காய்கறிகள்
தக்காளி, வெங் காயம், முள்ளங்கி, ப்ரக்கோலி, முட்டை க்கோஸ், காலிஃப்ளவர், கேரட், வெண்டிக்காய், புடலங்காய் கொத்தமல்லி போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம். இந்த உணவுகளின் மூலம் உடற் சூடு குறைந்து ஜீரணம் எளிதாகும். 400g தொடக்கம் 500g காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 50% பச்சையாகவும், 50% காலை உணவு மற்றும், மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
கீரை வகைகள்
வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் குறிப்பாக உடலுக்கு சூட்டை ஏற்படுத்தக் கூடிய கீரை வகைகளை தவிர்க்க வேண்டும்.
பருப்பு வகைகள்
அனைத்து வகையா ன பருப்பு வகைக ளும் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம். எனினும் அளவுடன் உணவில் சேர்ப்பது நல்லது.
மோர்
மோரை உண வில் சேர்ப்பதன் மூலம் வயிறு குளிர்மையாகும். மேலும் ரத்தப்போக்கும் படிப்படியாக குறையும்.
விளக்கெண்ணெய்
உணவில் விளக் கெண்ணெய் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலம் இலகுவாக கழிக்க முடியும்.
நீராவி உணவுகள்
புட்டு, இடியப்பம், இட்லி போன்ற நீராவி உணவுகளை காலை மற்றும், இரவு உணவுகளாக எடுத்துக் கொள்வது நல்லது. இவை எளிதில் ஜீரணம் அடையக் கூடியவை என்பதனால் மலம் கழிப்பதிலும் சிரமம் இருக்காது. மூல நோயும் குணமடையும்.
வெந்தயம்
வெந்தய மானது உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதாகும். இதனை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் ஊற வைத்த நீரை பருகி வந்தால் மூலநோய் குணமடையும். அதுமட்டுமல்லாது சர்க்கரை நோய் போன்ற பல நோய்களையும் குணப்படுத்தும் தன்மை வெந்தயத்திற்கு உண்டு.
முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.