டெஸ்டெஸ்தரோனை அதிகரிக்க தேவையான உணவுகள்
ஆண்மையியக்குநீர் (Testosterone) அல்லது (ஆங்கிலம்:டெஸ்டெஸ்தரோன்) என்பது ஓர் அந்திரோசன் வகை பாலின இயக்குநீர் ஆகும்.
இயக்க ஊக்கி இயக்குநீர்கள் கொலஸ்டிராலில் இருந்து உருவானவை.
பாலின இயக்க ஊக்கி உடலின் இனப்பெருக்கத் தொகுதி அவயங்களில் மாற்றங்களைக் கட்டுப்படுத்துகிறது.
அந்திரோசன் வகை இயக்குநீர்கள் ஆண்மை ஊக்கிகளாகும்.
ஆண்களின் விந்துச் சுரப்பிகள் மிகக் கூடுதலான இசுடெசுத்தோசத்தெரோனைச் சுரக்கின்றன.
சூலகங்களும் அண்ணீரகச் சுரப்பிகளும் இதனை குறைந்தளவில் சுரக்கின்றன. பெண்களை விட ஆண்களில் மிகவும் கூடுதலான அளவில் இருக்கிறது
இசுடெசுத்தோசத்தெரோன் இரண்டு விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதலாவதாக இது ஓர் ஆக்கமிக்க வளர்சிதைமாற்றத்தை உருவாக்குகிறது.
இதனால் தசைகளும் எலும்புகளும் மிக்க வளர்ச்சி அடைகின்றன. மற்றது இது ஓர் ஆண்மை ஊக்கியாகச் செயலாற்றுகிறது. இவை இரண்டும் சேர்ந்து உடலுக்கு ஆண்மைத்தன்மையைக் கொடுக்கிறது.
இதனால் பருவ காலத்தில் சிறுவர்களுக்கு மீசை, தாடி முளைப்பதும், ஆண்குறி, விந்துப்பை பெரிதாவதும் குரல் உடைவதும் நிகழ்கின்றன.
டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் விதைப் பகுதியில் சுரக்கக்கூடிய ஆண் ஹார்மோன் ஆகும். வயது அதிகரிக்க அதிகரிக்க டெஸ்டோஸ்டிரோன்கள் சுரப்பதன் அளவு குறையும்.
60 வயதுக்கு மேல் பத்தில் இரண்டு ஆண்களுக்கு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு இருக்கும். அதே போல் 70 வயதுக்கு மேல் பத்தில் மூன்று ஆண்களுக்கு குறைந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு இருக்கும். எனினும் இதன் சராசரி அளவு 300 – 1000 ng/dL ஆகும்.
இது சீரம் டெஸ்டோரிஜா அளவில் தெரியக்கூடிய அளவாகும். 300 ng/dL ற்கும் குறைவாக இருந்தால் ஒருவருக்கு டெ ஸ்டோஸ்டிரோன் குறைந்த அளவு உள்ளது என்பது அர்த்தம். அதேபோல் 30 வயதுக்கு கீழ் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து இருந்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கும்.
விறைத்தல் பிரச்சனை
விறைத்தல் பிரச்சினையானது டெஸ்ரோஸ்டிரோன் குறைவால் மட்டும் ஏற்படாது. சக்கரை நோய், தைராய்ட் கு றைவு, அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், புகைபிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம், மனசிதறல், இதயப் படபடப்பு நோய் போன்ற பல விடயங்களினால் கூட ஏற்படலாம்.
குறைவான விந்து
முடி கொட்டுதல் பிரச்சனை
உடற் சோர்வு
தசைவலு குறைவு
உடற்பருமன்
எலும்புகள் உறுதித் தன்மை குறைவு
எரிச்சல், மனக் குவிப்புத் திறன் குறைவு
ஞாபக சக்தி குறைபாடு
ரத்த மாறுபாடுகள் – ஹீமோகுளோபின் குறைவு
கால் வலி, தூ க்கமின்மை, வேகமான இதயத் துடிப்பு
டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் உணவுகள்
பொதுவாக, டெ ஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கச் செய்ய வைட்டமின் டி, மெக்னீசியம், ஜிங்கச் சத்துக்கள் அதிகளவு உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் செவ்வாழைப்பழம் மிகவும் நல்லது.
சின்ன வெங்காயம்
சின்ன வெ ங்காயத்தை நெய் அல்லது, எண்ணெயில் வதக்கி தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ் டிரோன் ஹார்மோன்கள் அதிகரிக்கும்.
இஞ்சி, பூண்டு
இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டை உணவில் சேர்த்தோ அல்லது, சூப் செய்தோ சாப்பிடலாம்.
முருங்கைப் பூ
முருங்கைப்பூ உண வில் சேர்ப்பதால் நல்ல பலன் கிடைக்கும். பத்து முருங்கை பூவை பாலில் சேர்த்து காய்ச்சி இரவு உண வு சாப்பிட்ட பின்பு சாப்பிட்டு வரலாம்.
ஆட்டுக்கால் சூப்
வாரம் இருமுறை ஆட்டுக் கால் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்.
கொழுப்பு மீன்கள்
காளான் மீன், மத்தி மீன் போன்றன நல்ல கொழுப்பு மீன்கள் ஆகும். இவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது ஒமேகா 3 பாட்டியாசிட் உள்ளதால் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி திறனுக்கு உதவும்.
கொக்கோ பவுடர்
கொக்கோ பவு டரை சுகர் இல்லாமல் பயன்படுத்தி வரலாம். பாலில் கலந்து அல்லது இனிப்பு குறைந்து சாக்லேட்டை தினமும் அதிகளவு சாப்பிட்டு வரலாம்.
அவகோடா
இதிலுள்ள மெக் னீசியமும், போரோன் எனும் மினறலும் டெஸ்ரோஸ்டிரோன் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக உள்ளன. இதனை வாரத்தில் இரண்டு அல்லது, மூன்று முறை எடுத்துக் கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.
இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.