jaffna7news

no 1 tamil news site

Health

மண்ணீரல் நோயிற்கான அறிகுறிகள்

மண்ணீரல் (spleen) அனேகமாக எல்லா முலையூட்டி விலங்குகளிலும் காணப்படும் முக்கியமான ஒரு உள் உடல் உறுப்பு ஆகும்.

இது வயிற்றின் இடது பகுதியிலுள்ளது. பழைய செங்குருதியணுக்களை குருதியிலிருந்து பிரித்தெடுத்து அகற்றுவது இதன் முக்கிய தொழிலாகும்.

அத்துடன் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையிலும் இது முக்கிய பங்கு வகிக்கும்.

இதன் செயற்பாடுகள் பல உள்ளன. ரத்தத்தை உருவாக்குதல், சேமித்தல், வடிகட்டுதல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனை உருவாக்குதல், WBC லிம்போசைட்டுகளை உருவாக்கி தொற்றுநோய்களைத் தடுத்தல் போன்ற முக்கிய செயற்பாடுகளை மண்ணீரல் செய்கின்றது.

மண்ணீரல் பாதிப்பு அறிகுறிகள்
மண்ணீரல் பாதிப்பு ஏற்பட்டால் வேகமான இதயத்துடிப்பு, குமட்டல், தலை சுற்றல், எடை அதிகரிப்பு, அடி வயி ற்று வலி மற்றும், உலர்ந்த அல்லது, கடினமான நாக்கு போன்ற அறிகுறிகள் தென்படும். இவை தவிர முழு உடலும் வலி, கால்கள் வீக்கம், சோர்வு அதாவது உடலில் உள்ள இறந்த செல்க ளையும் பாக்டீரியாக்களையும் நீக்குகின்றது.

இந்நிலையில் மண்ணீரல் செயற்பாட்டில் இடையூறு ஏற்படும் போது போதுமான ரத்த வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகின்ற போது உடலில் ஆற்றலும் குறையும். இதனால் உடல் பலவீனமாகி அன் றாட செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத களைப்பு தன்மை ஏற்படும்.

மேலும், மஞ்சள் காமாலை, ரத்த சோகை அதாவது மண்ணீரலானது உடலில் ரத்த செல்களில் உள்ள பாதிக்கப்பட்ட செல் களை வடிகட்டும் பணியை செய்கிறது. அது மட்டுமல்லாது இரத்த வெள்ளளை அணு க்களையும் இது உருவாக்குகின்றது.

எனவே மண் ணீரலில் பிரச்சனை இருந்தால் மண்ணீரல் பாதிக்கப்பட்டு உடலில் உள்ள ரத்தம் வலிமையுடன் இல்லாமல் ரத்தசோகை ஏற்படும்.

வாயுக்களால் உடலெ ங்கும் வலி, உடல் பலவீனம் அடைவது, உடற்பாரம், சாப்பிட்டவுடன் தூக்கம், ரத்த அழுத்தம் அதிகரிப்பு, சிறுநீர் சரியாகப் பிரியாமை போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

வயிறு நிறைவு அதாவது, பொதுவாக அதிகம் சாப்பிட்டால் வயிறு நிரப்பி இருப்பது போல் உணர்வு ஏற்படும். ஆ னால் எந்தவித உணவும் எடுக்காமலே இவ்வாறு உணர்வு ஏற்பட்டால் மண்ணீரல் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். பல நாட்கள் இவ்வாறான உணர்வு இருந்தால் வைத்தியரை நாட வேண்டும்.
மண்ணீரலைப் பாது காக்க எடுக்க வேண்டிய உணவுகள்

மெத்தி யோனைன் அதிகம் உள்ள காய்கறி பழங்களை உண்பதன் மூலம் ஆரோக்கியமான மண்ணீரலை பெறலாம்.

கேரட், பீட்ரூட், வெள்ளரி, முள்ளங்கி, புதினா, பூண்டு, முட்டைக்கோஸ், புதினா, பூசணி, தேங்காய், சின்ன வெங் காயம் முதலான. காய்கறிகளையும், திராட்சை ஆரேஞ்சு, அன்னாசி, ஆப் பிள், மாதுளை, ஸ்ட்ரோபெர்ரி, அத்திப்பழம் போன்ற பழ வகைகளையும், முளைவிட்ட தானியங்கள், வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றையும் எடுத்துக் கொள்வதன் மூலம் மண்ணீரல் பலம்பெறும்.

மேலும், அசைவ உண வுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மண்ணீரல் பலம்பெறும். குறிப்பாக கோழி, ஆடு, மாடு போன்றவற்றை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம்.

குளி ர்ந்த உண வுகள், சோ டாக்கள், ஐஸ்கிறீம், தயிர், பால் போன்ற உணவுகளைம், அன்னாசி, வாழை ப்பழங்கள், தர்ப்பூசணி போன்ற குளிர் மையான பழங்களை அதிகம் உட்கொள்வதனைத் தவிர்க்க வேண்டும்.

முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares