உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகள்

உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உண்ணாவிரத இரத்த சர்க்கரை பரிசோதனையின் முடிவுகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்த சர்க்கரை அளவு 100 mg/dL அல்லது 5.6 mmol/L க்கும் குறைவாக இருந்தால் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இது சாதாரண இரத்த சர்க்கரை அளவு.

அடிக்கடி சிறுநீர் சுரத்தல்
ரத்தத்தில் அதிக சக்கரை இருக்கும்போது அந்த சர் க்கரையை வெளி யேற்றுவதற்காக உடலில் அதிக நீ ரை சுரக்க செய்யும். இதனால் சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு அதிக சிறுநீர் உருவாகின்றது. இதனாலே தான் அடிக்கடி சிறுநீர் கழிக்கின்றனர்.

அதிக தாகம் மற்றும் நாவில் அதிக வறட்சி
ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும் போது அடங்காத தாக உணர்வு மற்றும், வறட்சி இருக் கும். உடலில் இருக் கும் திரவம் அடிக்கடி சிறுநீர் வழியாக வெளியேறிக் கொண்டிருப்பதால் உடம்பில் நீரிழப்பு ஏற்பட்டு அதிக தாகம் மற்றும், நாவில் வறட்சி உண்டாகிறது.

உடல் எடை கூடுதல் அல்லது குறைதல்
சர்க்கரை நோ யைப் பொறுத்தவரை உடலின் இன்சுலின் வேலை செய்யாத நிலை உருவாகி ன்ற போது உடல் எடை கூடும். அதே போல் உடலில் இன்சுலின் சுரப்பு முழுமையாக இல்லாத போது உடல் எடை இழப்பு உருவாகும்.

உடல் சோர்வு
ரத்தத்தில் அதிக சக் கரை இருக்கும்போது உடல் சோ ர்வு ஏற்படும். எந்த வேலையை செய்யவும் மனமின்மை ஏற்படும். காரணம் நாம் சாப் பிட்ட உணவில் இருக் கக்கூடிய குளுக்கோஸ் செல்களுக்குள் நுழைவதற்கு இன்சுலின் மிக அவசியம். இந்த இன்சுலின் உடலுக்குப் பற்றாக் குறை உருவாகும் போது செல்களுக்கு தேவையான குளுக்கோஸ் கிடைக்காமல் செல்கள் சரியாக வேலை செய்யாது. இதன் காரணமாகவே உடல் சோர்வு ஏற்படுகின்றது.

ஆறாத புண்கள்
உடலில் லேசான புண்கள் காயங்கள் ஏற்பட்டால் ஆறுவதற்கு பல நாட்கள் எடுக்கும். நோய் ரத்தத்தில் அதிக சர்க்கரை இருக்கும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் பலவினம் அடைகின்றது. மற்றும் உடல் செல் திசுக்கள் சீரற்ற நீர் சமநிலை காணப்படுவதாலும் காயங்கள் ஆறுவது தாமதமாகின்றது.

கண்பார்வை மங்கலடைதல்
அதிக சக்கரை உடலில் மெல்ல மெல்ல நரம்புகளை பாதிக்கும். இதன் விளைவாக கண்கள் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண்பார்வை மங்கலாகின்றது.

முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

மறக்காமல் இதையும் படியுங்க   சாக்ஸ் அணியாமல் ஷூ போடுறீங்களா? அப்போ இந்த பாதிப்புகள் உறுதி

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares