அக்குள் கருமை யை போக்க இயற்கை அழகு குறிப்புகள்..!

அக்குள் கருமை நீங்க தேங்காய் எண்ணெய்
தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு உங்கள் அக்குள்களை மசாஜ் செய்து பதினைந்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

அதை சாதாரண நீரில் கழுவி விடுங்கள். அக்குள் பகுதியில் உள்ள நிறம் மறைந்து உங்கள் தோலின் இயற்கை நிறம் விரைவில் திரும்ப கிடைத்துவிடும்.

ஆரஞ்சு தோல்
எலுமிச்சையைப் போ ன்றே ஆரஞ்சிற்கும் கருமையைப் போக்கும் சக்தி உள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்து டன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கல ந்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கு ளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கி ழங்கில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. மேலும் இதனை பயன்படுத்தினால், சருமத்தில் எந்த ஒரு பக்க விளையும் ஏற்படாது. ஏனெனில் இதில் அமிலமானது அளவாக உள்ளது.

ஆகவே உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு அக்குளை 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், கருமை யானது விரைவில் நீங்கும்.

தயிர்
தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அதனை அக் குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பே ஸ்ட் செய்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, பின் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த முறையி னாலும் அக்குள் கருமையைப் போக்கலாம்.

எலுமிச்சை
உருளைக் கிழங்கை விட, எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அது சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அதிலும் இதனை எப்போதும் தனியாக பயன்படுத்தக்கூடாது. மாறாக ஏதேனும் ஒரு பொருளுடன் சேர்த்து தான் பயன் படுத்த வேண்டும்.

அதிலும் தினமும் குளிக்கும் முன், எலுமி ச்சை சாற்றினை நீரில் கலந்து, அதனை பஞ்சில் நனைத்து, அக்கு ளை தேய்த்து, 5 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். மேலும் குளித்து முடித்த பின்னர், ஏதேனும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரி க்காயிலும் உருளைக்கிழங்கில் உள்ளது போன்ற ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அத்தகைய வெள்ளரிக்காயை தின மும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும் அல்லது வெள் ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ் சள் தூள் சேர்த்து கலந்து, அதனை அக்குளில் தடவி உலர வை த்து கழுவ வேண்டும்.

முக்கிய குறிப்பு : தேவை எப்படி தகுந்த வைத்திருந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும்.

இதுபோன்ற மருத்துவ குறிப்புகளை பெற்றுக் கொள்ள JAFFNA7NEWS ஐ கட்டாயம் பாருங்கள் உங்களது ஆதரவைத் தாருங்கள் ஏதும் கருத்துக்கள் இருப்பின் COMMENT பாக்ஸில் உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.

Shares