சனி பெயர்ச்சி 2022 – ஏழரை சனியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! இந்த ஒரு ராசிக்கு ஜென்ம சனி? கடும் எச்சரிக்கை

சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும்.

இந்த ஏழரை சனியால் சனி தன் அதிரடி ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளார். இதனால் யாருக்கு என்ன பலன்களை தரப்போகிறார் சனிபகவான் என்று பார்க்கலாம்.

கும்பம் ஜென்ம சனி

கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம்.

கும்ப ராசிக்கு ஜென்ம சனி நடைபெறுவதால் ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. கவனம் தேவை தடைகளைத் தாண்டி முன்னேற்றம் உண்டு.
மகரம் பாதசனி

மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம் முடிந்து பாத சனி ஆரம்பிக்கிறது. வாகன பயணங்களில் கவனம் தேவை. மிதமான வேகம் அவசியம்.

கோபத்தை கட்டுப்படுத்தவும். சனிபகவான் உங்கள் ராசி அதிபதி, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் பேச்சில் நிதானம் அவசியம்.

வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்கு, எட்டு, 11ஆம் வீடுகளின் மீது விழுவதால் செய் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.

நிறைய லாபங்கள் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் வரும். இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாகக் கடந்து விடலாம். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார்.

மறக்காமல் இதையும் படியுங்க   ஜூலை மாதம் முதல் சனியால் கஸ்டத்தை அனுபவிக்கபோகும் ராசிகள் யார் யார் தெரியுமா?
Shares