jaffna7news

no 1 tamil news site

Health

கா லையிலேயே யோ காசனம் செய் வது நல்லதா?

5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும்.

அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

யோகா என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். “யோகா என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

உடலையும், மனதையும் வலிமையாக்கும் பயிற்சிகளில் யோகாசனம் முக்கியமானது. காலையிலேயே யோகாசனம் செய்யலாமா? யோகாவின் பயன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

கணினி சார்ந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்களுக்கு மன அமைதி தருவது யோகாசனம்.

யோகாசனம் மூலம் செய்யும் மூச்சு பயிற்சி சீரான சுவாசத்தை அளித்து சுவாச பிரச்சினைகள் வராமல் தடுக்கிறது.

யோகா செய்வதால் இரத்த ஓட்டம் சீராவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

பல கோணங்களில் வளைந்து யோகா செய்வதால் உடல் அழகான வடிவத்தை பெறுகிறது.

தினசரி காலை யோகா செய்வதால் மூளை புத்துணர்ச்சி அடைந்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.

காலையிலேயே யோகாசனம் செய்வதால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்கள் கரைகிறது.

காலை சூரிய ஒளியில் யோகா செய்வதால் விட்டமின் டி சத்து கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares