பிரண்டை செடியின் மகத்துவமான மருத்துவ பயன்கள்!உங்களுக்கு தெரியுமா
பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும்.
இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.
பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.
நாட்டு மருத்துவத்தில் அவசியமான பொருட்களில் ஒன்றான பிரண்டை செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பிரண்டையை என்னென்ன வகையில் பயன்படுத்தலாம் என்பதை காண்போம்.
இளம் பிரண்டையை நெய்விட்டு வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.
அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வர வீக்கம் குறையும்.
பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பிரண்டை தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து சாப்பிட்டு வர பெருங்குடல் புண் குணமாகும்.
பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெருகும்.
பிரண்டை துவையல் செருமான கோளாறு, மலச்சிக்கலை போக்குகிறது.
பிரண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க உதவும்.