தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு கதாநாயகிகளுக்கும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இல்லை என்பதுதான் உண்மை. சீசனுக்கு சீசன் புது புது காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர்கள் நாளடைவில் எதாவது ஒரு திரைப்படத்தில் மக்களால் ஈர்க்கப்பட்டு அந்த சீசனில் முன்னணி காமெடி நடிகராக நடிக்கறார்,
கடந்த சில வருடங்களாக நடிகர் நாகேஷில் தொடங்கி இன்று யோகி பாபு வரை இதே நிலைதான்.இப்படி தமிழ் சினிமாவில் லோடுக்கு பாண்டியாக அறிமுகமாகி பினனர் இன்றுவரை காமெடியில் காலக்கி வருபவர் நடிகர் கருணாஸ். நந்தா திரைப்படத்தின் மூலம் தமி சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த படங்களில் பல உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் ஜோடிபோட்டு காமெடி நடிகராக நடித்து இருக்கிறார்.
நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கருணாஸ் சினிமாவில் கவனத்தை குறைத்துகொண்டு அரசியல், விவசாயம் என தற்போது இறங்கிவிட்டார்.அதை அவரது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகளை பார்த்தாலே தெரியும். அந்த அளவுக்கு அவர் விவசாயம் செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அவரது மனைவி கிரேஸ் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம். அவர்கள் குடும்பத்தில் இருக்கும் எல்லோருமே சினிமா துறையில் பிரபலம் தான். அவர்களது மகன் கென் கருணாஸ் அசுரன் படத்தில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.கிரேஸ் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவரது உடல் எடையை பற்றி தான் மிக மோசமாக விமர்சிப்பார்கள். ஆனாலும் அதை அவர் காமெடியாக எடுத்துக்கொள்வார்.
ஆனால் இளம் வயதில் கிரேஸ் ஒல்லியாக இருக்கும் போட்டோவை கருணாஸ் பதிவிட்டு இருக்கிறார் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் அவர் இந்த போட்டோவை பதிவிட்டு உள்ளார்