பிரபல பாடகி விஜயலட்சுமியின் கணவர் யா ர் தெரியுமா? அ ட இவரும் ஒ.ரு பிர.ப.லமா?? அழகிய ஜோடியின் புகைப்படம் இதோ.!

தமிழ் திரைப்படத்துறையில் இசைக்கருவி இசைப்பதிலும் திரைப்பட பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருபவர் வைக்கம் விஜயலக்ஷ்மி. கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது பிறவியிலேயே பார்வை குறைபாடு கொண்டவர். தனது சிறு வயதிலேயே ஒலி நாடாக்கள் மூலம் பாடல்களை அப்படியே ராகம் தாளத்துடன் பாடி தனது பாடல் திறனை வளர்த்துக் கொண்டார்.

மேலும் மலையாள சினிமாவில் வெளிவந்த செல்லுலாய்டு என்னும் திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தனது முதல் பாடலுக்கு மாநில அரசின் விருதைப் பெற்றார். மேலும் நாயகன், இடம் பொருள் எவல், விழித்திரு, வீரசிவாஜி, வெள்ளக்காரதுரை, ஜெய்பீம், தெறி, பாகுபலி, கனா போன்ற ஏராளமான திரைப்படங்களில் பாடல்களைப் பாடி உள்ளார்.

காயத்ரி வீணை என்ற ஒற்றை கம்பி மட்டுமே கொண்ட அபூர்வ வீணை வைத்துள்ளார். இந்த வீணையை வாசிக்க தெரிந்தவர்களும் வீணை வைத்திருப்பவர்களும் மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் சமீபத்தில் கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து காயத்ரி வீணையில் 5 மணி நேரம் 67 பாடல்கள் வாசித்து உலக சாதனை படைத்தார். இயக்குனர் அருண் காமராஜ் இயக்கத்தில் வெளிவந்த கனா எனும் திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள எனும் பாடலைப் பாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தார்.

இவரின் அழகான குரலும் பாடலின் உச்சரிப்பும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பாடகி வைக்கம் லட்சுமிக்கு திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தனது கணவர் உடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார்.

மறக்காமல் இதையும் படியுங்க   நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடன்கள்.. கத்தியை காட்டி மிரட்டல்
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( Jaffna7news தளம் இதற்கு பொறுப்பேற்காது).
Shares