தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை மோனிகா. இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். இவர் அவசர போலீஸ் 100 என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து தற்போது வரை பல படத்தில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் இவர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்து பிரபலமானார். அதன் பின் இவர் சில வருடமாகவே தன் படிப்பின் மீது கவனத்தை செலுத்தி வந்தார்.
இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த போது என் ஆசை மச்சான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு விருது வழங்கப்பட்டது. பல மொழிகளில் நடித்து வந்த நடிகை மோனிகாவுக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
இதன் காரணமாக நடிகை மோனிகா திருமணம் செய்ய முடிவு எடுத்தார். முஸ்லீமாக மாறி நடிகை மோனிகா திருமணம் செய்துள்ளார். அதில் மாலிக் என்ற 45 வயதான பிரபலமான தொழிலதிபரை தான் நடிகை மோனிகா திருமணம் செய்துள்ளார்