அ தி ர் ச்சி வீ டியோ வவுனியாவில் கட்டப்பஞ்சாயத்து வயதுவந்தவர்களுக்கு மட் டும் பாருங்கள்.!!

அண்மையில் வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுகந்தன் என்ற ஒரு இளைஞனும் அவனது மனைவியும் அடையாளம் தெரியாதவர்களினால் வெட்டியும், எரித்தும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே.

கொல்லப்பட்ட சுகந்தன் என்ற இளைஞன் அந்தப் பிரதேசத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்ற ஒருவர் என்று தற்பொழுது தெரியவருகின்றது.

ஆட்களைக் கடத்துவது, கப்பம் பெறுவது, சட்டவிரோத பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது உட்பட கட்டப்பஞ்சாயத்து செய்துவந்த ஒருவர் என்றே கொல்லப்பட்ட சுகந்தன் தொடர்பாகக் குற்றம் சுமத்துகின்றார்கள் பிரதேசவாசிகள்.

தற்பொழுது எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது. சுகந்தனும், அவனது குழுவினரும் ஒரு இளைஞனை அடைத்துவைத்து பணம் கேட்டு மிரட்டி, அந்த இளைஞனை கடுமையாகத் தாக்கும் காட்சியும், அந்த இளைஞனை கொலை செய்து புதைத்துவிடப்போதாக எச்சரிக்கை விடுக்கும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பி.கு: சுகந்தனினால் தாக்கப்படும் இளைஞன் தற்பொழுது உயிருடன் உள்ளாரா என்று தெரியவில்லை.

குறிப்பிட்ட இளைஞன் உயிருடன் இருந்தால் உடனடியாக எமது ஊடகத்தை தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். அவருடைய உறவினர்கள் இந்த வீடியோவைப் பார்த்தாலும் உடனடியாக எங்களைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

(இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் தகாத வார்த்தைகள் பேசப்படுவதாலும், மனதை பாதிக்கக்கூடிய காட்சிகள் உள்ளதாலும், வயது வந்தவர்கள் மாத்திரமே இந்த வீடியோவைப் பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றார்கள்)

மறக்காமல் இதையும் படியுங்க   யாழில் தேர்த் திருவிழாவில் கைவரிசை காட்டிய இரு பெண்கள் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *