11 வரு ட ங்கள் க ழித்து பிறந்த குழந்தை மகளுக்கு கோலாகலமாக பெயர் சூட்டு விழா நடத்திய ராம்ச ர ண்வைரல் பு கை ப்படங்கள்.!!

சிரஞ்சீவியின் ஒரே மகன் ராம்சரண். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அண்மையில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலமாக இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

இவருக்கு உபசனா என்ற பெண்ணுடன் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 11 ஆண்டுகளான நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இவர் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த செய்தியை ராம்சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஏப்ரல் மாதம் உபாசனாவுக்கு வளைகாப்பு நடைபெற்றது.

இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ராம்சரனின் நெருங்கிய நண்பர் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 20ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.

பெண் குழந்தை பிறந்தது தொடர்ந்து குழந்தையை பார்க்க பல பிரபலங்கள் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். தாத்தாவான சந்தோஷத்தில் மெகா ஸ்டார் சிரசின் சிரஞ்சீவி பல ஆண்டுகளுக்குப் பிறகு எங்களது ஆஞ்சநேயர் எங்களது பிரார்த்தனையை நிறைவேற்றியுள்ளார் இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.
அதைத்தொடர்ந்து நடிகர் ராம்சரண் குழந்தையை ஏந்தியபடி மருத்துவமனையிலிருந்து மனைவி உபாசனா மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அதைத்தொடர்ந்து ராம்சரண் வீட்டில் மிகவும் எளிமையாக மகளுக்கு பெயர் சூட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அதில் மகளுக்கு கிளின் காரா கோனிட்டாலா என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் ராம்சரண் தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கர்ப்பமாக இருந்தது முதல் குழந்தை பெற்றது வரை அனுபவித்த தருணங்களை வீடியோவாக வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து உபசனாவுக்கு அவரின் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் சேர்ந்து பிறந்தநாள் பார்ட்டி வைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .