பள்ளி சென்று திரும்பிய அண்ணனை பார்த்து சந்தோசத்தில் குட்டி தேவதை செய்த செயல் ஒன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் ஏகோபித்த ஆதரவை பெற்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அண்ணன் தங்கை உறவு பாசம் அல்ல அது ஒரு உணர்வு… அண்ணனை பார்த்ததும், தலை கால் புரியாமல் துள்ளி குதித்து ஆட்டம் போட்ட சிறுமி..!ஒரு குடும்பம் என்று இருந்ததால் அம்மா, அப்பா, அண்ணன் ,அக்கா தம்பி, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், பெரிய அக்கா, சிறிய அக்கா, பெரிய தம்பி,சின்ன தம்பி என்று உறவுகள் இருந்த காலம் போய்…. இந்தக்காலத்தில் புத்தகத்தில் மட்டுமே படிக்கும் உறவுகளாக மாறி வருகிறது ரத்த சொந்தங்கள். கிராமங்களில் அவங்க பெரிய குடும்பத்து காரங்க…… அவங்க ரத்த உறவுகளே சுப நிகழ்ச்சிகளுக்கு போதும் என்ற காலங்கள் எல்லாம் மலை ஏறி போனது. பின்னாட்களில் உறவுமுறையை பாட புத்தகங்களில் இருந்தே இனி வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்வார்கள் என்ற நிலை உருவாகி வருவதாக கவலை தெரிவித்துள்ளார்கள் பெரியோர்கள்.
பொருளாதார சூழ்நிலை கருதியும் ஆண் , பெண் இருபாலரும் வேலைக்கு செல்வதால் ஒரு குழந்தையே போதும் இன்னும் ஒரு குழந்தை இருந்தால் அவர்களை வளர்ப்பது சிரமம் என்று கருதுவதாலும், தற்போது உள்ள பொருளாதாரத்தில் நல்ல கல்வி, உடை, உணவு, பொழுது போக்கு அம்சங்கள் போன்றவை ஒரு குழந்தைக்கு மட்டுமே நிறைவேற்ற முடியும் என்ற காரணத்தினாலும் நிறைய பெற்றோர்கள் ஒரு குழந்தை போதும் என்ற மனநிலையில் இருப்பதாக டிவி நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளனர்.ஒரு குழந்தையாய் வளரும் குழந்தைகள் சமூகத்துடன் பழகுவதற்கும், விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாமலும், கருத்துக்களை பரிமாறி கொள்ள உடன் உறவுகள் இல்லாமல் தனிமையில் வீடியோ கேம், சமூகவலைதளங்கள் போன்றவற்றில் நேரத்தை செலவழித்து வருகின்றனர். பெற்றோர்கள் சிறந்த எதிர்காலத்தை ஒரு குழந்தைக்கு மட்டுமே நிறைவேற்ற போதுமானதாக இருப்பதாக கருத்தில் கொண்டாலும், அவர்களின் காலத்திற்கு பிறகு அந்த குழந்தைகள் உறவுகள் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதற்கு வழிவகுக்கும்.
மேலும் அவர்களுக்கு உதவி தேவைப்படும் நேரத்தில் உற்றார், உறவினர் இல்லாமல் சிறிதளவேனும் அக்கறை கொள்ள யாரும் இல்லாத நிலை உருவாகவும் வாய்ப்புகள் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். என்ன தான் காலங்கள் கடந்தாலும் அண்ணன், தங்கை உறவுகள் மாறப்போவது இல்லை. அண்ணன் அப்பாவிற்கு நிகரானவன், சிறு வயதில் அதிகம் சண்டை பிடித்து உருண்டு புரண்டு சண்டை போட்டாலும், அண்ணனையோ அல்லது தங்கையையோ யாரேனும் குறை கூறினால் அவர்களிடம் சண்டையிட்டு ஒரு வழி பண்ணாமல் வீடு திரும்பமாட்டார்கள். அவர்களின் உறவு அவ்வளவு பலம் மிக்கது. இங்கு சிறு குழந்தை தன் அண்ணன் பள்ளி முடித்து வீடு திரும்பியதை கண்டு மகிழ்ச்சியில் தலை…கால் தெரியாமல் துள்ளி குதித்து ஆடிய காணொலி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை இங்கே காணலாம்