காதலுக்கு மொழி, சாதி, இனம் என எந்த பாகுபாடும் கிடையாது. அன்பால் மட்டுமே கட்டி எழுப்பப்படும் உன்னதமான விசயம் தான் காதல். ஏன், பலரும் நாடு கடந்துகூட காதல் செய்துள்ளனர். வல்லவன் படத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தன்னைவிட வயதுகூடிய டீச்சர் நயன் தாராவை லவ் செய்வது போல் காட்சி வரும். அதுகூட நான்கைந்து வயது வித்தியாசம் தான்
ஆனால் இங்கே 29 வயதே ஆன இளம்பெண் ஒருவர், 80 வயது தாத்தாவை லவ் செய்து கல்யாணம் செய்திருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுணைச் சேர்ந்த டெர்சல் ரெஸ்மஸ் என்ற 30 வயதே ஆன பெண், அவரைக்காட்டிலும் 50 வயது கூடிய வில்சன் ரஸ்மஸ் என்பவரை லவ் செய்து கல்யாணம் செய்துள்ளார். வில்சன், தன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வதாகவும், அவரோடு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
முதன் முதலில் செய்தித்தாள் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்களாம். ஏற்கனவே, திருமணம் முடிந்து பேரப்பிள்ளைகளும் எடுத்துவிட்ட வில்சன், உருகி, உருகி காதலித்துவந்தாராம். வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் பார்த்தவுடன், கமலினி முகர்ஜியிடம் காதலைச் சொல்வாரே அப்படி பார்த்தவுடனே சொல்லிவிட்டாராம் தாத்தா.
தொடர்ந்து டேட்டிங் கூட்டிப்போன தாத்தா, ஒரு வருடம் கழித்துத் தன் காதலியை கைப்பிடித்தாராம். இதைவிட ஆச்சர்யம் என்ன வென்றால் இந்தக் கல்யாணத்துக்கு 30 வயது பெண் டெர்சலின் பெற்றோர் ஒகே சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் வில்சன் தாத்தா தனது 56 வாது மகனௌ சாட்சியாக வைத்துக்கொண்டே இந்தக் கல்யாணத்தைச் செய்துள்ளார். நாங்கள் இருவரும் வெளியில் போனால் பலரும் அப்பா மகள் என நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்குள் ஆத்மார்த்தமான காதல் இருக்கிறது.’என்கிறார்கள் இருவரும்!