ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார். அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் மோசமாக கையாளுவார்கள்.
இப்படிப்பட்ட புதன் ஏப்ரல் 25 ஆம் திகதியான இன்று மேஷ ராசியில் இருந்து புதன் ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறது.
மே 10 ஆம் தேதி வக்ர நிலையில் பின்னோக்கி நகரும்.
இப்போது ரிஷப ராசிக்கு செல்லும் புதனால் யாருக்கு பிரச்சினை என்பதை பார்க்கலாம்.
மேஷம்
நிதி ரீதியாக உங்களால் அதிகம் சேமிக்க முடியாது. எந்த ஒரு ஒப்பந்தத்தையும் கையெழுத்திடும் போதும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக உங்கள் வாழ்க்கை துணையிடம் எதற்கும் கட்டளையிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உறவை மோசமாக்கும்.
ரிஷபம்
வியாபாரிகளுக்கு லாபகரமான காலமாக இருக்கும். ஒரு புதிய வீட்டைக் கட்ட விரும்பினால் அல்லது உங்கள் தற்போதைய வீட்டை மறுவடிவமைக்க விரும்பினால், அதை செய்ய இது சிறந்த நேரம்.
மிதுனம்
நிதியைப் பொறுத்தவரை, உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இக்காலத்தில் எந்த புதிய திட்டங்களையும் தொடங்காதீர்கள். உங்களின் கோபத்தையும் விரோதத்தையும் கட்டுப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்.
கடகம்
இக்காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். குறுகிய கால மற்றும் நீண்ட கால வாய்ப்புகளில் முதலீடு செய்வது உங்கள் நிதி இலக்குகளை அடைய உதவும்.
சிம்மம்
வேலையில் உங்களை நிலைநிறுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதால் இக்காலம் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருக்கும். இதன் விளைவாக, உங்கள் வேலையை விரைவாகவும் திறமையாகவும் முடிப்பீர்கள். சொத்துக்களில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல தருணம்.
கன்னி
உங்கள் செலவுகள் அதிகரித்தாலும், அதற்கேற்ப வருமானமும் இருக்கும். இக்காலத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
எம்.என்.சி கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு இக்காலம் நன்மை பயக்கும். சிலர் இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். எதிர்பாராத பணப் பலன்கள் கிடைத்தாலும், வருமானம் சீரற்றதாக இருக்கும். சிலருக்கு நெருங்கிய குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். ஆனால் அது விரைவில் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
உங்களுக்கும் உங்கள் காதல் துணைக்கும் சில ஈகோ பிரச்சனைகள் ஏற்படலாம். சொந்த விஷயங்களில் மூன்றாம் நபரை தலையிட விடாதீர்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல மரியாதையையும் புகழையும் பெறுவார்கள். புதிய தொழில் தொடங்க இது ஒரு சிறந்த தருணம்.
தனுசு
உங்கள் வேலையில் நீங்கள் வெற்றியடைவீர்கள். நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் சிலர் பதவி உயர்வு பெறலாம். உறவுகள் சுமூகமாக செல்லும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
மகரம்
இக்காலம் பணிபுரிபவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். சில தம்பதிகளுக்கு திருமண வாய்ப்பு அமையும். இல்லாவிட்டால், அது உறவை மோசமாக்கும்.
கும்பம்
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்ய இது நல்ல காலம். இக்காலத்தில் உங்களின் மாமியார்-மாமனார் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதிக முயற்சி எடுப்பவர்கள் மட்டுமே இக்காலத்தில் தங்கள் வேலையை முடிக்க முடியும்.
மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வது ஒரு புத்திசாலித்தனமான நிதி முடிவு.
ஏனெனில் அது நீண்ட காலத்திற்கு பலன் தரும். நீங்கள் வலுவான தன்னம்பிக்கையையும், கூர்மையான பகுப்பாய்வு மனதையும் கொண்டிருப்பீர்கள். இது மற்றவர்களுடன் உரையாடும் திறனை அதிகரிக்கும்.