தன்னை மிகவும் கஷ்டப்பட்டு படிக்கவைத்த அப்பாவுக்கு, தான் பட்டம் வாங்கிய நாளில் மகள் செய்த செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அப்படி அவர் என்ன செய்தார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.
அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான். அதேபோல் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் அவர்களது அப்பாவைத்தான் அதிகம் பிடிக்கும்.
இங்கேயும் அப்படித்தான்.ஒரு வீட்டில் அவரது அப்பா மிகவும் சிரமப்பட்டு தன் மகளை படிக்கவைத்தார். மகளுக்கு பட்டமளிப்பு விழாவும் நடந்தது. பட்டம் வாங்கிய கையோடு வீட்டுக்கு வந்த மகள், தனது பட்டம் பெறும் உடையையும், தான் வாங்கிய பட்டத்தையும் தன்னை படிக்க வைத்து அழகுபார்த்த தன் தந்தைக்கு போட்டுவிட்டு அழகுப் பார்க்கிறார். தந்தையோ வெட்கத்தில் முகம் சிவக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.
மகள் தந்தைக்கு ஆற்றும்உதவி
இவள் தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்…👋👋👋 pic.twitter.com/x9kHUglmue— சிந்தனைவாதி (@PARITHITAMIL) May 19, 2022