குரு பார்வையிருந்தால் கோடி நன்மைகள் நம்மைத் தேடி வரும்.
இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும்.
இந்த குரு பெயர்ச்சியால் யாருடைய வீட்டில் கெட்டிமேளம் கொட்டப்போகிறது என்று பார்க்கலாம்.
ரிஷபம்
திருமணமாகும் வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். குருபகவான் எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார்.
பரிகாரம் – மின்னல் வேக நன்மைகள் நடைபெற பெற கல்லாலமரத்தடியில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கடகம்
குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கன்னி
நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும்.
இது காதல் மலரக் கூடிய காலம் ஆகும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் கூடி வரப்போகிறது. பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும் காலம் வந்து விட்டது.
விருச்சிகம்
உங்களுக்கு குரு பார்வை வந்து விட்டது. திருமணம் கைகூடி வரும். கெட்டி மேளச்சத்தம் கேட்கும். காதல் மலரும் காலம் இது என்பதால் உற்சாகத்தில் விசிலடிக்கலாம்.
பரிகாரம் – குரு பகவானால் மேலும் நன்மைகள் நடைபெற தென்திட்டை ராஜகுருவை வழிபடலாம்.
மகரம்
குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் வீட்டில் கெட்டி மேளச்சத்தம் கேட்கும். தொழிலில் லாபம் கிடைக்கும்.
பரிகாரம் – மேலும் நன்மைகள் நடைபெற வாலாஜாபேட்டையில் எழுந்தருளியுள்ள மேதா தட்சிணாமூர்த்தியை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்
குரு ஜென்ம குருவாக பயணம் செய்கிறார். சிலர் வீட்டில் குவா குவா சத்தம் கேட்கும். பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள்.
பரிகாரம் – சிவ ஆலயத்தில் நவகிரக குரு பகவானை திங்கட்கிழமை சென்று வணங்கி வரலாம்.