முட்டை விலையும், கோழி இறைச்சி விலையும் குறையும் என்று கால்நடை மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (07.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகள் குறைப்பு
அண்மைக்காலமாக டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் கணிசமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பல பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
எனினும் சந்தையில் எந்தவொரு பொருட்களின் இதுவரை குறைவடையவில்லை என்றும் பழைய விலையே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.