jaffna7news

no 1 tamil news site

Astroyogi

சனி அமாவாசையுடன் ஆண்டின் முதல் சூர்ய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். இந்த நேரத்தில் பூமியின் சில பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

நாளை சனிக்கிழமை சித்திரை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ அமாவாசை நாளில் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அமாவாசை சனிக்கிழமையில் வந்தால், அது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

இந்து மதத்தில் சனிக்கிழமைகளில் அமாவாசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னேர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும், சனி அமாவாசை நாளில் ஸ்நானம் செய்து, முன்னோர்களை நினைத்து தானம் செய்வது தர்ப்பணம் செய்வதால், பித்ருக்களின் ஆசி கிடைத்து வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும்.
சூர்ய கிரகணம்

பஞ்சாக்கின் படி, 2022 ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 இரவு 12:15 மணிக்கு அதாவது, நாளை தொடங்கி மே 1 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 04:07 வரை நீடிக்கும்.

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரியன் முழுமையாகவே, பகுதி அளவிலோ மறைக்கப்பட்டிருக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் என்றழைப்படுகிறது.

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. ஆனால் , தென் அமெரிக்கா, பசிபிக் அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா போன்ற நாடுகளில் இந்த கிரகணத்தை பார்க்க முடியும்.

பொதுவாக கிரகணம் நிகழும் போது, அதில் இருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் தடுக்கப்படுவதால் பூமியில் வாழும் உயிரினங்கள், தாவரங்கள் பாதிக்கப்படுகின்றன.

எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
மேஷம்

சூரிய கிரகணத்தின் தாக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக கருத முடியாது. எனவே, இந்த நாளில் இந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
கடகம்

இந்த சூரிய கிரகணம் கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காமலும், யாருடனும் கருத்து வேறுபாடு கொள்ளாமலும் இருப்பது நல்லது. உங்கள் சிந்தனை நேர்மறையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
விருச்சிகம்

இந்த சூரிய கிரகணமும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லை. இந்த காலத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் பயணம் செய்ய வேண்டாம்.

சூரிய கிரகணத்தின் விளைவுகள் மற்றும் பரிகாரங்கள்

இந்த மூன்று ராசிக்காரர்கள் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போது உங்கள் சிந்தனையை நேர்மறையாக வைத்து தானம் செய்யுங்கள்.
கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை

தர்ப்பை அல்லது துளசி இலைகளை உணவு மற்றும் தண்ணீரில் போடவும். அதனால் கிரகணத்தின் எதிர்மறை தாக்கம் அதில் ஏற்படாமல் இருக்கும். கிரகணத்திற்குப் பிறகு அவற்றை உட்கொள்ளலாம்.

கிரகணத்தின் போது, ​​கடவுள் வழிபாட்டில் அதிகபட்ச நேரத்தை செலவிடுங்கள்.

வீட்டின் பூஜை அறை கதவை மூடி வைக்கவும். அப்போது கோவில்களின் கதவுகளும் மூடப்பட்டிருக்கும்.

கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு தான் பிற வேலைகளை தொடங்க வேண்டும்.

கிரகண காலத்தில், ஸ்தோத்திரங்கள் சொல்வதனா, கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.
கிரகணத்தின் போது செய்யக்கூடாதாவை

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஏனெனில், அப்படி வெளியே வரும் போது, கர்ப்பிணிகள் மீது வெளிச்சம்பட்டால், சில கதிர் வீச்சுகள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். மேலும், அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதாம்.

கிரகணத்தின் போது கர்ப்பிணி பெண்கள் உணவு அருந்துதல் மற்றும் நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பயணம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் தையல், வெட்டுதல், சுத்தம் செய்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் வளரும் நம்முடைய குழந்தைக்கு சேதத்தை ஏற்படுத்துமாம்.

கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்படும் எந்த உணவையும் உண்பது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

கிரணகத்துக்கு முன்பும், பின்பும் வீட்டை கழுவிவிட்டு நாமும் குளிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares